தொகுரு புகுயாமா

சப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு கரிம வேதியியல் விஞ்ஞானி

தொகுரு புகுயாமா (Tohru Fukuyama (福山 透 Fukuyama Tōru?) சப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு கரிம வேதியியல் விஞ்ஞானி ஆவார். 1948 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் பிறந்தார். சப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1998 ஆம் ஆண்டு புகுயாமா பிணைப்பு வினை என்ற வேதிவினையைக் கண்டறிந்தார்.

தொகுரு புகுயாமா
Tohru Fukuyama
தொகுரு புகுயாமா
பிறப்பு1948
ஆஞ்யோ ஆய்ச்சி, சப்பான்
பணியிடங்கள்ஆர்வார்டு பல்கலைக்கழகம், இரைசு பல்கலைக்கழகம், டோக்கியோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்நகோயா பல்கலைக்கழகம், ஆர்வார்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்யோசிட்டோ கிச்சி
அறியப்படுவதுபுகுயாமா பிணைப்பு வினை

2015 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்ற சட்டோசி ஓமுரா இவருடைய நண்பர் ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  • "Advisory Board: Tohru Fukuyama". Royal Society Publishing.
  • Homepage of Tohru Fukuyama பரணிடப்பட்டது 2021-04-21 at the வந்தவழி இயந்திரம்
  • CV of Fukuyama பரணிடப்பட்டது 2012-10-18 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகுரு_புகுயாமா&oldid=3588404" இலிருந்து மீள்விக்கப்பட்டது