யோசிட்டோ கிச்சி
யோசிட்டோ கிச்சி (Yoshito Kishi, 13 ஏப்ரல் 1937 – 9 சனவரி 2023) சப்பானிலுள்ள நகோயா நகரத்தில் பிறந்தவர் ஆவார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியாகப் பணிபுரிந்தார். கரிமத் தொகுப்பு வினைகள் மற்றும் ஒட்டுமொத்த தொகுப்பு வினைகளின் அறிவியலுக்காக இவர் அறியப்படுகிறார்.
யோசிட்டோ கிச்சி | |
---|---|
பிறப்பு | 13 ஏப்பிரல் 1937 நகோயா |
இறப்பு | 9 சனவரி 2023 (அகவை 85) |
பணி | வேதியியலாளர் |
விருதுகள் | Guggenheim Fellowship, Person of Cultural Merit, Ryoji Noyori Prize, Ernest Guenther Award, Nakanishi Prize, Tetrahedron Prize, American Chemical Society Award for Creative Work in Synthetic Organic Chemistry |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
சப்பான் நாட்டின் நகோயாவில் பிறந்த இவர் நாகோயா பல்கலைக்கழகத்தில் பயின்றார், இங்கு அவர் தனது பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார் [1]. இராபர்ட் பர்ன்சு வுட்வர்ட் உடன் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் போதானாசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் இரண்டாண்டு கால முனைவர் பட்ட நேற்படிப்பில் ஈடுபட்டார் [1]. 1966 முதல் 1974 வரை அவர் நகோயா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக இருந்தார் [1]. 1974 ஆம் ஆண்டு முதல், இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஆவார். கிச்சியின் ஆய்வுகள் சிக்கலான இயற்கைப் பொருட்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு வினையை மையம் கொண்டிருந்தது. பேலிடாக்சின், மைக்கோலாக்டோன்கள், ஏலிகோன்டிரின்கள், சாக்சிடாக்சின், டெட்ரோடாக்சின், கெல்டானாமைசின், பேட்ராகோடாக்சின் போன்ற பல சேர்மங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு வினைகளுடன் இவரது ஆய்வு தொடர்பு கொண்டிருந்தது [2]. நோசாகி-இயாமா- கிச்சி வினை உட்பட பல புதிய வேதியியல் வினைகளின் வளர்ச்சிக்கும் இவர் பங்களித்திருக்கிறார் [3].
பரிசுகளும் விருதுகளும்
தொகு- சப்பான் அகாதெமியின் இம்பீரியல் பரிசு-1999
- கரிம வேதியியல் மற்றும் உயிரிமருத்துவ வேதியியலில் படைப்பூக்கத்திற்கான டெட்ராகீட்ரன் பரிசு-2001
- எர்னசுடு கியுந்தர் விருது-2001
- கலாச்சார மேம்பாட்டு மனிதர் விருது-
- புனிதக் கருவூலம் விருது-2013
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Kishi, Yoshito; Rando, Robert R. (1998). "Structural Basis of Protein Kinase C Activation by Tumor Promoters". Accounts of Chemical Research 31 (4): 163. doi:10.1021/ar9600751.
- ↑ Yoshito Kishi பரணிடப்பட்டது அக்டோபர் 18, 2010 at the வந்தவழி இயந்திரம், Department of Chemistry and Chemical Biology, Harvard University
- ↑ Takai, K.; Tagashira, M.; Kuroda, T.; Oshima, K.; Utimoto, K.; Nozaki, H. (1986). "Reactions of alkenylchromium reagents prepared from alkenyl trifluoromethanesulfonates (triflates) with chromium(II) chloride under nickel catalysis". Journal of the American Chemical Society 108 (19): 6048. doi:10.1021/ja00279a068. பப்மெட்:22175376.