தொடர்நிகழ்வு வரைபடம்

தொடர்நிகழ்வு வரைபடம் என்பது ஒருங்கிணைந்த மாடலிங் மொழியில் (யுனிஃபைட் மாடலிங் லாங்குவேஜ்) (UML) உள்ள ஒருவகை இடைவினை (interaction) வரைபடம் ஆகும். இது செயல்கள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு இயங்குகிறது என்பதையும் எந்த வரிசையில் இயங்குகிறது என்பதையும் காண்பிக்கிறது. செய்தி தொடர்வரிசை விளக்கப்படத்தின் ஒரு சுருக்க வடிவமே இதுவாகும்.

எளிய உணவக தொடர்நிகழ்வு வரைபடம்
UML 2 வரைபடத்திற்கான எடுத்துக்காட்டு

தொடர்நிகழ்வு வரைபடங்கள் சிலநேரங்களில் நிகழ்வு பின் தொடருதல் வரைபடங்கள், நிகழ்வு காட்சி, மற்றும் நேர வரைபடங்கள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.[1]

மேலோட்டப் பார்வை

தொகு

ஒரு நிகழ்வு வரைபடத்தில், இணையான செங்குத்துக்கோடுகளாக ("லைஃப்லைன்கள்"), பல்வேறு செயல்கள் அல்லது ஒரே நேரத்தில் இருக்கும் ஆப்ஜெக்ட்கள் மற்றும் அவற்றுக்கு இடையே பரிமாறிக்கொள்ளப்படும் செய்திகள் கிடைமட்ட அம்புக்குறிகள் ஆகியவை அவை நிகழும் வரிசையிலேயே காண்பிக்கப்படும். இது எளிய நிகழ்நேர காட்சிகளை படங்கள் மூலமாக காண உதவுகிறது.

எடுத்துக்காட்டாக, வலதுபுறத்தில் உள்ள UML 1.x வரைபடம் ஒரு (எளிய) உணவக அமைப்பின் செய்திகளின் தொடர்ச்சியை விளக்குகிறது. இந்த வரைபடத்தில் ஒரு வாடிக்கையாளர் உணவையும் ஒயினையும் ஆர்டர் செய்வதும் ஒயினைக் குடிப்பதும், உணவு உண்பதும் இறுதியாக உணவுக்கு பணம் செலுத்துவதும் காண்பிக்கப்படுகிறது. கீழ்ப்புறமாக நீட்டிக்கப்படும் புள்ளியிட்ட கோடுகள் நேரவரம்பைக் காண்பிக்கின்றன, நேரம் மேலிருந்து கீழ்நோக்கி செல்கிறது . ஒரு செயல்படுநரிடமிருந்து (actor) அல்லது ஆப்ஜெக்ட்டிடமிருந்து பிற ஆப்ஜெக்ட்களுக்கு வழங்கப்படும் செய்திகளை (தூண்டிகள்) அம்புக்குறிகள் காண்பிக்கின்றன. எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் 'pay' என்ற செய்தியை Cashier க்கு அனுப்புகிறார். அரை அம்புக்குறிகள் ஒத்திசையா முறை அழைப்புகளைக் காட்டுகின்றன.

UML 2.0 தொடர்நிகழ்வு வரைபடமானது UML 1.x தொடர்நிகழ்வின் அதே குறியீடுகளை ஆதரிப்பதோடு சாதாரண நிகழ்வு போக்குகளின் மாதிரியிடுதலுக்கு கூடுதல் மாறுபாடுகளை வழங்குகிறது.

வரைபட கட்டுமான அடுக்குகள்

தொகு

லைஃப்லைன் ஒரு ஆப்ஜெக்டுடையதாக இருந்தால் அது ஒரு ரோலைக் காண்பிக்கும். அந்த நிகழ்வை வெறுமையாக விடுவது அநாமதேய மற்றும் பெயரற்ற நேர்வுகளைக் குறிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்க.

இடைவினைகளைக் காண்பிக்க செய்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை செய்தி பெயர் மேலே எழுதப்பட்ட கிடைமட்ட அம்புக்குறிகள் ஆகும். நிரப்பப்பட்ட முனைகளைக் கொண்ட அடர்த்தியான அம்புக்குறிகள் ஒத்திசைவு அழைப்புகள், கோட்டு முனைகளைக் கொண்ட அடர்த்தியான அம்புக்குறிகள் ஒத்திசையா அழைப்புகள் மற்றும் கோட்டு முனைகளைக் கொண்ட இடைவெளியிட்ட அம்புக்குறிகள் பதில் செய்திகள் ஆகும். இந்த வரையறை UML 2 ஐ பொறுத்த வரை சரியானது, ஆனால் UML 1.x இலிருந்து கணிசமான அளவுக்கு வேறுபடுகிறது.

செயல்படுத்தல் பெட்டிகள் அல்லது முறைமை-அழைப்பு பெட்டிகள் என்பவை லைஃப்லன்களுக்கு மேல்பகுதியில் வரையப்படும் வெற்று செவ்வகங்கள் ஆகும். இவை ஒரு செய்திக்கு மறுமொழியாக செய்யப்படும் செயல்களைக் குறிக்கும் (UML இல் இயக்கக்குறிப்புகள்).

ஆப்ஜெக்ட்களின் அழைப்பு முறைகள் அவையே செய்திகளைப் பயன்படுத்தக்கூடும் மற்றும் கூடுதல் நிலை செயல்படுத்தலுக்கு அவை எவற்றின் மீது வேண்டுமானாலும் புதிய செயல்படுத்தல் பெட்டிகளைச் சேர்க்க்கூடும்.

ஒரு ஆப்ஜெக்ட் அழிக்கப்படும்போது (நினைவகத்தில் இருந்து அகற்றப்படுதல்), ஒரு லைஃப்லைனுக்கு மேல்பகுதியில் X வரையப்படுகிறது. அதற்கு கீழே இடைவெளியிட்ட கோடுகள் வரையப்படுவது நிறுத்தப்படும் (ஆனாலும், இந்த நிலை முதல் எடுத்துக்காட்டில் கிடையாது). அது ஆப்ஜெக்டிலிருந்தே அல்லது மற்றொன்றிலிருந்து வரப்பெற்ற ஒரு செய்தியின் முடிவாக இருக்க வேண்டும்.

வரைபடத்துக்கு வெளியே இருந்து அனுப்பப்படும் ஒரு செய்தியானது ஒரு நிரப்பப்பட்ட வட்டத்தின் மூலம் காண்பிக்கப்படும் (UML இல் "அறியப்பட்ட செய்தி") அல்லது ஒரு தொடர்நிகழ்வு வரைபடத்தின் கரையிலிருந்து (UML இல் "கேட்") காண்பிக்கப்படும்.

தொடர்நிகழ்வு வரைபடங்களின் திறன்களை UML 2 கணிசமான அளவுக்கு மேம்படுத்தின. பெரும்பாலான மேம்பாடுகள் இடைவினை துண்டுகள் [2] என்பதை அடிப்படையாக கொண்டவை. இது ஒரு மொத்த இடைவினையின் சிறிய துண்டுகளைக் காண்பிக்கிறது. பல இடைவினை துண்டுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு பலவகையான இணைப்பு துண்டுகளை [3] உருவாக்குகின்றன, பின்னர் இவை இணையியல், நிபந்தனை கிளைகள், விருப்ப இடைவினைகள் போன்ற மாதிரி இடைவினைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

பயன்பாடு மற்றும் வரம்புகள்

தொகு

சில அமைப்புகளில் சிறிய, நிலைத்த எண்ணிக்கையாலான ஆப்ஜெக்ட்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றுக்கு இடையேயான குறிப்பிட்ட செய்திகளின் தொடர்நிகழ்வுகள் மூலம் வெளிப்படுத்தப்படக்கூடிய எளிய டைனமிக் நடத்தை இருக்கக்கூடும். அவ்வாறான நிலைகளில் தொடர்நிகழ்வு வரைபடங்கள் அமைப்பின் நடத்தையை முழுமையாக குறிப்பிடும். ஆனால் பெரும்பாலும், நடத்தை என்பது அதிக சிக்கலானது, எடுத்துக்காட்டாக, தொடர்புகொள்ளும் ஆப்ஜெக்ட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக அல்லது அதிக அளவில் மாறக்கூடியதாக இருக்கும்போது, ஏராளமான கிளை புள்ளிகள் (எ.கா. விலக்கங்கள்) இருக்கும்போது, சிக்கலான மறுசெய்கைகள் இருக்கும்போது அல்லது ஆதார போட்டி ஏற்படும்போது போன்ற சூழல்கள்.இவ்வாறான நிலைகளில், தொடர்நிகழ்வு வரைபடங்களால் அமைப்பின் நடத்தையை முழுவதுமாக விளக்க முடியாது, ஆனால் அவை அமைப்பின் பொதுவான பயன் நிலைகளை குறிப்பிடுதல், அதன் நடத்தையில் சிறிய அளவிலான விவரங்கள் மற்றும் நடத்தையின் எளிமைப்படுத்தப்பட்ட மேலோட்டப் பார்வைகள் ஆகியவற்றைச் செய்ய முடியும்.

குறிப்புதவிகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்நிகழ்வு_வரைபடம்&oldid=3599246" இலிருந்து மீள்விக்கப்பட்டது