தொடர்புப் பிரதி

தொடர்புப் பிரதி என்பது ஒரு எழுத்தாளர் அவருடன் தொடர்புடைய ஒருவருக்கு தன் கையோப்பத்தை இட்டு வழங்கிய நூலின் பிரதியாகும்.[1] நூலாசிரியர் மட்டுமின்றி அந்த நூலோடு தொடர்புடைய பிறரான அச்சிடுபவர், பதிப்பகத்தார், முகப்போவியர், அணிந்துரை வழங்கிய அறிஞர் ஆகியோர் கையொப்பமிட்டு வழங்கும் பிரதியும் தொடர்புப் பிரதி என்றே அழைக்கப்படுகிறது.[2] தொடர்புப் பிரதியானது பெரும்பாலும் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு பிரதியாகும், தான் எழுதிய புத்தகத்தை தன் நண்பர், சக பணியாளர், சக எழுத்தாளர் போன்று அவருக்கு அறிமுகமானவருக்கு வழங்கப்பட்ட புத்தக பிரதியாகும். தொடர்புப் பிரதிகள் புத்தக சேகரிப்பாளர் மத்தியில் அன்பளிப்புப் பிரதியைவிட மதிப்பு மிக்கதாக கருதப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Carter, John; Barker, Nicholas (2010). ABC For Book Collectors. New Castle, DE: Oak Knoll Books. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781584561125. 
  2. ஆ. இரா. வேங்கடாசலபதி (25 ஏப்ரல் 2017). "புதுமைப்பித்தனும் நூல் அன்பளிப்புரைகளும்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்புப்_பிரதி&oldid=3577571" இலிருந்து மீள்விக்கப்பட்டது