தொட்டமனே மகாதேவி ஹெக்டே

தொட்டமனே மகாதேவி ஹெக்டே, ஒரு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ஒரு பெண் சுதந்திரப் போராட்ட வீரராவார். 1906 ம் ஆண்டில் பிறந்த இவர், கர்நாடக முன்னாள் முதல்வரான, மறைந்த ராமகிருஷ்ண ஹெக்டேவின் உறவினர். மகாதேவி அம்மா என்று அழைக்கப்பட்ட இவர் சிறுவயதிலே கணவரை இழந்த கைபெண்ணாவார். உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சித்தப்பூர் தாலுக்காவைச் சேர்ந்த தொட்டமனே கிருஷ்ணய்யா சுப்பையா ஹெக்டேவின் மகளாக பிறந்த இவரது குடும்பமே பம்பாய் கர்நாடகாவின் இந்திய சுதந்திர இயக்கத்தின் போது செய்துள்ள பல்வேறு தியாகங்களுக்காக அந்த பகுதியில் நன்றாக அறியப்பட்டதாகும். 1930 இல் சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட இவர், வார்தாவில் உள்ள மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் சேர்ந்து சேவை புரிந்தார். ஆச்சார்யா வினோபா பாவே மற்றும் ஜம்னாலால் பஜாஜ் ஆகியோரின் நெருங்கிய நண்பராகவும்  திகழ்ந்தார்.

மகாதேவி அம்மா என்று அழைக்கப்பட்ட இவர், இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்திலும் பின்னர் ஆச்சார்யா வினோபா பாவே நடத்திய சர்வோதயா இயக்கத்திலும் சேர்ந்ந்து சேவை புரிந்துள்ளார்.[1]

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மகாதேவி கிட்டத்தட்ட மூன்று முறை சிறை சென்றார். ஆச்சார்யா வினோபா பாவேயின் சர்வோதயா இயக்கத்தின் ஆறு ஆசிரமங்களில் ஒன்றான பெங்களூரில் உள்ள விஸ்வநீதம் அறக்கட்டளை மற்றும் வல்லப நிகேதன் ஆகியவற்றின் நிறுவனரான பணியாற்றியுள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. bggru (2004-01-13). "Hegde, a multifaceted personality". தி இந்து. Archived from the original on 2016-12-24. பார்க்கப்பட்ட நாள் 2017-08-19.
  2. "8th year Punyaradhana of Mahadevi Tai | Ramakrishna Hegde Rashtriya Chintana Vedike". ramakrishnahegdevedike.org. Archived from the original on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-08-19.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டமனே_மகாதேவி_ஹெக்டே&oldid=3741893" இலிருந்து மீள்விக்கப்பட்டது