தொண்டி (பாண்டிநாட்டுத் துறைமுகம்)

அரபிக்கடல் ஓரத்தில் சேரநாட்டில் தொண்டி என்னும் துறைமுகம் இருந்தது போலவே பாண்டிய நாட்டிலும் தொண்டி என்னும் ஊர் இருந்தது. இதனை இக்காலத்தில் உள்ள தொண்டி எனலாம்.

தொண்டித் துறைமுகம் வங்கக்கடல் ஓரமாக இருந்தது. அங்கிருந்து அகில், துகில் என்னும் பட்டாடை, சந்தனம், கருப்பூரம் ஆகிய பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றின் நறுமணம் மதுரைக் கூடல் நகரில் வீசியது. கொண்டல் என்னும் கீழைக்காற்று வீச்சில் அந்த மணம் கலந்து வந்தது. [1] பாண்டிய மன்னன் இறந்த பிறகு அரியணைகாக அவரது மகன்கள் குலசேகர பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் போர் புரிந்தனர். அதில் பராக்கிரம பாண்டியன் கொல்லபட்டான். இதை கேள்விபட்ட இலங்கை மன்னன் பராக்கிரம பாபு என்பவன் தன் பெயர் கொண்டவனை கொன்ற பாண்டியனை கொல்லுவதற்கு படை எடுத்து வந்தான். பாண்டிய நாட்டின் பல இடங்களை பிடித்து விட்டான். சுந்தரபாண்டிய மன்னன் சிறப்பாக போர் புரிந்தான். ஆனால் போரில் அவனும் கொல்லப்பட்டான் . அவன் இறந்த இடம் இன்று சுந்தர பாண்டியன் பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இறுதியில் பாண்டியன் சேரர்களின் உதவியை நாடுகிறான். சேரன் தன் ஒரு படையை தொண்டிக்கு அனுப்பி பராக்கிரம பாபுவை வென்று பாண்டியனுக்கு நாட்டை மீட்டுதருகிறான். பாண்டிய மன்னன் சேர மன்னனிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறான் இலங்கை மன்னன் மீண்டும் தன் மீது போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது அதனால் உங்கள் படைகளை இங்கே காவலுக்கு வேண்டும் என்றான். சேர மன்னனும் தன் படையை காவலுக்கு வைத்து விட்டு நாடு திரும்பினான். அந்த படையினர் தான் தொண்டியின் பூர்விக மக்களாக இன்றும் உள்ளனர்.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. ‘ஓங்கு இரும் பரப்பின்
    வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
    அகிலும், துகிலும், ஆரமும், வாசமும்,
    தொகு கருப்பூரமும், சுமந்துடன் வந்த
    கொண்டலொடு புகுந்து, கோமகன் கூடல் (சிலப்பதிகாரம் 14 ஊர்காண் காதை)