தொனிக் கோட்பாடு
தொனிக் கோட்பாடு (dhvani theory) என்பது ஆனந்தவர்த்தனர் (அண். கிபி 820–890) உருவாக்கிய ஒரு ஒலிக் கோட்பாடாகும். பல்வேறுபட்ட உணர்ச்சிக் குறிப்புகளைத் தரும் ஒலிக்கு தொனி என்று பெயர். இந்தத் தொனியை இலக்கியக் கோட்பாடாக ஆனந்தவர்த்தனர் உருவாக்கினார்.[1]
"புலவர் ஒருவர் பாடலை எழுதும் போது, அவர் பல்வேறு உணர்ச்சிக் குறிப்புகளை உருவாக்குகிறார். அப்பாடலை உணர்வதற்குப் படிப்பவரும் அதே அலைநீளத்தில் அதனைப் படிக்க வேண்டும்" என ஆனந்தவர்த்தனர் கூறினார்.[1][2]
தொனிப் பொருள் இலக்கியங்கள்
தொகு- இராமாயண, மகாபாரத இதிகாசங்கள்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- கம்பராமாயணம்
- பாஞ்சாலி சபதம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Premnath, Devadasan; Foskett (Ed.), Mary; Kuan (Ed.), Kah-Jin (15 November 2006), Ways of Being, Ways of Reading: Asian American Biblical Interpretation, Chalice Press, p. 11, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8272-4254-8
- ↑ Anandavardhana; Abhinavagupta; Daniel H.H. Ingalls; J.M. Masson; M.V.Patwardhan, The Dhvanyaloka of Ānandavardhana with the Locana of Abhinavagupta, Harvard Oriental Series
- இலக்கிய இசங்கள், அகரம் வெளியீடு, தஞ்சாவூர்