தொனி (மொழியியல்)

மொழியியலில், தொனி (Tone) என்பது ஒரு சொல்லின் பொருளை மாற்றுவதற்காக வெவ்வேறு சுருதிகளுடன் உச்சரிப்பதை குறிக்கும்.[1] பல மொழிகளிலும், உயிரொலிகளையும் மெய்யொலிகளையும் மாற்றினால் ஒரு சொல்லின் பொருளை மாற்றலாம். மேலும், பல மொழிகளில் ஒரு சொற்றொடரை உச்சரிக்கும்பொழுது தொனியை மாற்றி மன உணர்வு, வலியுறுத்தல் போன்ற தகவல்களை காட்டலாம். ஆனால், தொனி கொண்ட மொழிகளில் ஒரு சொல்லை உச்சரிக்கும்பொழுது உயிரொலிகள், மெய்யொலிகளை மாற்றாமல் தொனியை மட்டும் மாற்றி, அதன் பொருளையே மாற்றமுடியும்.

உலகில் பேசப்படும் தொனிக்கொண்ட மொழிகள்




மாண்டரின் சீன மொழியில் 'மா' எனும் சொல்லுடன் நான்கு தொனிகள் உச்சரிக்கப்படுகின்றன:

உலக மொழிகளில் இரண்டு வகை தொனி முறைமைகள் உள்ளன. ஒரு முறைமையில், ஒரு சொல்லின் தொனியை அதற்கு சுற்றி வர சொற்களுடன் ஒப்பிட்டு அதன் பொருளை கண்டுபிடிக்கலாம். "ரெஜிஸ்டர் தொனி" ("Register tone") என்று குறிக்கப்படுகிற இம்முறைமை, ஆபிரிக்காவில் பேசப்படும் நைகர்-கொங்கோ மொழிகளிலும், அமெரிக்க பழங்குடியினர்களின் மொழிகளிலும் பார்க்கலாம்.[2] இன்னுமொரு முறைமையில், ஒரு சொல் அல்லது ஒரு அசையை உச்சரிக்கும்பொழுது அதன் தொனியின் உருவத்தை பொறுத்து அதன் பொருளை கண்டுபிடிக்கலாம். "கான்ட்டூர் தொனி" ("Contour tone") எனும் இம்முறைமையை, கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பேசப்படும் சீன மொழி, தாய்லாந்து மொழி, வியட்நாமிய மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பார்க்கலாம்.[3] சில மொழிகள் இரண்டு முறைமைகளையும் பயன்படுத்துகின்றன.

திராவிட மொழிக் குடும்பத்தில் தொனி கொண்ட மொழிகள் இல்லை. இந்திய ஆரிய மொழிகளும் பெரும்பான்மையாக தொனியில்லாத மொழிகள். ஆனால் பஞ்சாபி மொழியில் மட்டும் சில சொற்களில் தொனி உள்ளது.

எழுத்து

தொகு

தொனி கொண்ட மொழிகளை எழுதும்பொழுது, தொனிகளைக் காட்டுவதற்காக சில முறைமைகள் உள்ளன. சீன மொழி உள்ளிட்ட சில மொழிகளின் எழுத்துமுறைகளில் தொனிகள் தனித்தனியாக குறிக்கப்படவில்லை. வியட்நாமிய மொழி உள்ளிட்ட வேறு சில மொழிகளின் எழுத்துமுறைகளில் தொனிகள் எல்லாம் தனித்தனியாக குறிக்கப்படுகின்றன. நாவஹோ உள்ளிட்ட சில மொழிகளின் எழுத்துமுறைகளில், ஒரு தொனி குறிக்கப்படாது, ஆனால் அதற்கு மேலும், கீழும் உச்சரிக்கப்படும் தொனிகள் எழுத்து குறியீட்டுகளைப் பயன்படுத்திக் குறிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Yip, Moira (2002). Tone. Cambridge University Press. pp. 1–3, 12–14.
  2. Odden, David (1995). Tone: African languages in "Handbook of Phonological Theory". Oxford: Basil Blackwell.
  3. Yip, Moira (2002). Tone. Cambridge University Press. pp. 178–184.

ஆதார நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொனி_(மொழியியல்)&oldid=3799324" இலிருந்து மீள்விக்கப்பட்டது