தொப்புள் அடையாளக் காமம்

தொப்புள் அடையாளக் காமம் (Navel fetishism) என்பது பிறரின் தொப்புளையோ அல்லது தனது தொப்புளையோ காமநோக்கில் பார்த்து இன்புறுவது ஆகும்.[1][2][3][4][5]

ஒரு பெண்ணின் தொப்புளின் அண்மைநிலை காட்சி.

காரணங்கள்தொகு

இந்த காம உணர்வானது குழந்தைப் பருவத்திலேயே தோன்ற ஆரம்பிக்கலாம் [6] அல்லது முதிர்பருவத்தில் தோன்றலாம்.[7][8]

பெண்தொகு

இந்த உணர்வு பெண்களுக்கு தோன்ற ஒரு காரணம், காம உணர்வைத் தூண்டும் உடல் பகுதிகளில் தொப்புளும் ஒன்றாகும்.[9][10] தந்த்ரா என்பதில் உள்ள "தந்" உடலிலுள்ள சக்தியையும், "த்ரா", அதைக் கடத்தும் தன்மையையும் குறிக்கும். தாந்திரீகத்தில் தொப்புள் முக்கிய இடம்பெற்றது.பெண்களுக்கு ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்திற்கு மூல காரணமாய் இருப்பது தொப்புள் என்றும்,இது ஸ்தனத்திற்கும்,யோனிக்கும் இடையில் பாலமாய் இருந்து காமத்தை தூண்ட வல்லது என்கிறது காம சூத்திரம்.[11]

ஆண்தொகு

இந்த உணர்வு ஆண்களுக்கு தோன்ற காரணம், ஆண்களில் சிலர் பெண்ணின் தொப்புளை பெண் இனச்சேர்க்கை உறுப்பின் மாதிரியாக கருதுகின்றனர்.[12][13][14]

கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகைகள்தொகு

 
தொப்புளை விரலால் வருடுவது கிளர்ச்சியை ஏற்படுத்தும்.
 
ஆங்கில எழுத்து "T" போன்ற செங்குத்தான வடிவம் கொண்ட ஒரு பெண்ணின் தொப்புள்.

செயல்பாட்டுக் காமம்தொகு

ஆண் பெண் இரு பாலரில் சிலருக்கு தொப்புளில் முத்தமிடுவது, தொப்புளை விரல்[15], நுனி நாக்கு, மலர் இதழ்கள் அல்லது பறவை இறகினால் வருடுவது போன்ற செயல்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தும்.[12][16] தொப்புளில் தேன், மது போன்ற திரவியங்களை ஊற்றி உறிஞ்சுவதும் கிளர்ச்சியை ஏற்படுத்தும்.[12][17] சிலர் இத்தகைய செயல்களை கற்பனை செய்து சுய இன்பம் கொள்வர்.[18].

பார்வைக் காமம்தொகு

சிலருக்கு இத்தகைய செயல்களை பார்ப்பது கிளர்ச்சியை ஏற்படுத்தும்.[19] மேலே கூறப்பட்ட செயல்களை காம உணர்வுகளைத் தூண்டும் வகையில் காட்சிப்படுத்தி வெளிவரும் பாலுணர்வுக் கிளர்ச்சிய நிகழ்படங்களை பார்ப்பதும் கிளர்ச்சியை ஏற்படுத்தும்.[20] சிலருக்கு தொப்புளை பார்ப்பது மட்டுமே கிளர்ச்சியை ஏற்படுத்தும். இதைப் பார்வைக் காமம் என்று குறிப்பிடுவர்.[21] பெண்களின் தொப்புள் பல வடிவங்களில் இருந்தாலும் ஆங்கில எழுத்து "T" போன்ற செங்குத்தான வடிவம் கொண்ட தொப்புளே மிக கவர்ச்சியானது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.[22] இளம் பெண்கள்,இடை ஆட்டக்களைஞர்கள்,நடிகைகள் மற்றும் பாப் இசை பாடகிகள் போன்றோர் தொப்புளில் தோடு மாட்டிக்கொள்கின்றனர்.இவைகளும் தொப்புளை நோக்கி பார்வைகளை ஈர்க்க காரணமாகின்றது. ஆண்களுக்கு தொப்புளை வெளிகாட்டும் பிக்கினி (Bikini), லோ ஹிப் ஜீன்ஸ் போன்ற உடைகளில் பெண்களை காண்பதும்,பெண்களுக்கு மேல்சட்டை உடுத்தாத ஆண்களை காண்பதும் காம உணர்வை தூண்டும்.[23]

பாலின்ப இலக்கியம்தொகு

தொப்புளை மையப்படுத்தியோ அல்லது தொப்புளை காம நோக்கில் அடையாளப் படுத்தியோ எழுதப்படும் இலக்கிய காமக் கதைகள் மற்றும் கவிதைகளும் கிளர்ச்சியை ஏற்படுத்தும்.உதாரணமாக சாங் ஒப் சாலமன் என்னும் யூத மொழி பைபிள் நூலில் சுலைமி என்னும் பெண்னை வர்ணிக்கும்போது "thy navel is like a round goblet, which wanteth not liquor"(7:2) என்று குறிப்பிடப்படுகிறது. ”உனது தொப்புள் திராட்சை ரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருக்கிறது” என்பது இதன் பொருளாகும்.[24][25][26][27]

பிரபலங்கள்தொகு

 
தொப்புளில் தோடு மாட்டியிருக்கும் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்.

தொப்புளின் மீது ஈர்ப்பு கொண்ட பிரபலங்கள் சில கிழ்வருமாறு,

 • பிரபல அமெரிக்க இசைத்தட்டு கலைஞரும் நடிகையுமான மடோனா மே 1985ல் ஸ்பின் என்னும் அமெரிக்க இதழுக்கு கொடுத்த பேட்டியில் "என் தொப்புள் என் பிரியத்துக்குரியது.எனக்கு மிகவும் கச்சிதமான.உட்புறத் தொப்புள் அமைந்துள்ளது.நான் எனது தொப்புளில் எனது விரலை பதித்தால் உடலின் மத்திய பகுதியின் நரம்பு ஒன்றில் கிளர்ச்சி ஏற்பட்டு என் முதுகில் பாய்கிறது.சுமார் 100 தொப்புள் படங்களில் இருந்தும் கூட நான் எனது தொப்புளை சரியாக கண்டறிவேன்." என்று கூறியுள்ளார்.[28][29]
 • சிலி நாட்டை சேர்ந்த எழுத்தாளர் இசபெல் அல்லெண்டே (Isabel Allende) தனது புத்தகம் ஒன்றில்,"எனக்கு எனது காதலரின் தொப்புளில் பச்சை முட்டையை இட்டு வெட்டிய வெங்காயம்,உப்பு,மிளகு,எலுமிச்சை மற்றும் டோபாஸ்கோ சாஸ் உடன் உண்ண ஆசை" என்று கூறியுள்ளார்.[30][31]
 • தெலுங்கு திரைப்பட இயக்குனர் K.ராகவேந்த்ர ராவ் பெண்களின் தொப்புள் மீது ஆர்வம் கொண்டவர்.[32] அவரது திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் கதாநாயகிகளின் தொப்புளில் பூக்கள் மற்றும் பழங்களை போடுவது,தண்ணீர்,ஐஸ் கட்டி போன்றவற்றை சொட்டவிடுவது போன்ற காட்சிகள் எப்பொழுதும் இடம்பெறும்.[33][34][35][36][37][38] சக தெலுங்கு பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் விழா ஒன்றில்,"ராகவேந்த்ர ராவ் தன் திரைப்படங்களில் கதாநாயகிகளை கலை நயத்துடன் காட்சி படுத்துவார்.குறிப்பாக அவர்களின் தொப்புள் மிக அழகாக காட்சிபடுத்தபடும்" என்று கூறியுள்ளார்.[39][40][41]

மேற்கோள்கள்தொகு

 1. Urbandictionary.com
 2. The Quick-Reference Guide to Sexuality & Relationship Counseling By Dr. Tim Clinton, Mark Laase
 3. WrongDiagnosis.com - Navel fetishism
 4. "Fetishism/Navel". 2011-01-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 5. The Disappearance of the Universe - Gary R. Renard - Chapter 14 - Better Than Sex.
 6. Navel fetishism by Yohana
 7. Ask the Sexpert - Dr Mahinder Watsa[தொடர்பிழந்த இணைப்பு]
 8. "Stomach and Bellybutton Fetish?". 2012-05-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 9. "Embarassed to tell my boyfriend what turns me on". Cosmopolitan, Volume 208. 1990. http://books.google.co.in/books?id=-GtNAQAAIAAJ&q=navel+fetish&dq=navel+fetish&hl=en&sa=X&ei=ITgvT5CjOuP00gGYh5TLCg&ved=0CD4Q6AEwAw. பார்த்த நாள்: 6 February 2012. 
 10. A celebration of sex - Douglas E. Rosenau
 11. "ருத்ர முத்திரை". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 12. 12.0 12.1 12.2 The Happy Hooker's Guide to Sex: 69 Orgasmic Ways to Pleasure a Woman - Xaviera Hollander
 13. Dear Shira - A Jewel in the Navel?
 14. "குதிப்பதுவே! மிதப்பதுவே! குலுங்குவதே!". 2016-04-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 15. The Anatomy of Pleasure - Victoria Zdrok
 16. Touch Me There!: A Hands-On Guide to Your Orgasmic Hot Spots - Yvonne K. Fulbright
 17. The Rules of Love - The 64 Arts of the Kama Sutra - Suzie Heumann
 18. Sex By Doctorndtv.Com
 19. Voyeurism - MentalDisorders.com
 20. Vegans Are Tastier - Joe DeMarco
 21. Voyeurism - Dictionary.com
 22. Important Facts About Navel
 23. What Guys See That Girls Don't: Or Do They? - Sharon Daugherty
 24. ஆபாசம் நிறைந்த பைபிள் 3[தொடர்பிழந்த இணைப்பு]
 25. Song of Solomon
 26. The Erotic Motive in Literature - Albert Mordell
 27. In Celebration of Love, Marriage, and Sex - Gary L. Crawford
 28. Confessions of a Madonna - May 1985
 29. Confessions Of A Madonna - May 1985.
 30. Isabel Allende - Joan Axelrod-Contrada
 31. Erotic Foods: Grape Goddess Guides to Good Living - Catherine Fallis
 32. "A Bellyful of dreams". 2015-04-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 33. "Celebrities - K. Raghavendra Rao". 2012-11-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 34. "K. Raghavendra Rao Biography". 2012-09-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 35. Raghavendra Rao- Even a book cant say fully about him and his work.
 36. ‘Jhummandi Naadam’ Review: Old Concoction
 37. Sneha's navel shown in all possible ways!
 38. 'Navel-Specialist' Worked On Sneha's Navel
 39. Dasari speaks about heroine's 'Navel'
 40. Dasari speaks about heroine's 'Navel'
 41. "Dasari praises Raghavendra Rao's Navel show". 2016-03-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)