தொரப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி

தொரப்பள்ளி உயர்நிலைப்பள்ளி என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஒன்றியம், தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி ஆகும். இப்பள்ளி 2005 ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக துவக்கப்பட்டது. 2010இல் இது நடுநிலைப்பள்ளியாகவும், 2011இல் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், பேரண்டப்பள்ளி, கொல்லப்பள்ளி, நாயனகொண்டப்பள்ளி, அக்ரஹாரம், ராஜபுரம், தொரப்பள்ளி போன்ற கிராமங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன கணினி அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. எஸ்.கே.ரமேஷ் (6 செப்டம்பர் 2018). "மூதறிஞர் ராஜாஜியின் உறவினர்கள் ஆதரவோடு சாதனை படைக்கும் தொரப்பள்ளி கிராம அரசுப்பள்ளி: தலைமை ஆசிரியையின் ஓராண்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு". செய்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)