தொரப்பள்ளி
தொரப்பள்ளி ( Thorapalli ) அல்லது தொரப்பள்ளி அக்ரகாரம் என்பது இந்தியா, தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]. இவ்வூர் தென் பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் ஒசூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஒசூர்- கிருட்டிணகிரி சாலைக்கு அருகில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது.
தொரப்பள்ளி
தொரப்பள்ளி அக்ரகாரம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 2,715 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635109 |
மக்கள் வகைப்பாடு
தொகுஇவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 2177 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 9849, இதில் 4669 பேர் ஆண்கள், 5180 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 72.16% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09க்கும் குறைவு ஆகும்.[2]
ஊரின் சிறப்பு
தொகுஇந்த ஊரில்தான் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் கவர்னர் ஜெனரலுமான ராஜாஜி பிறந்தார். அவர் பிறந்த வீட்டை நினைவு இல்லமாக தமிழக அரசு பராமரித்து வருகிறது.
மேற்கோள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
- ↑ http://www.census2011.co.in/data/village/643794-thorapalli-agraharam-tamil-nadu.html