தொற்கா (கிரேக்கம், அரமேயத்தில் தபித்தா) என்பவர் யோப்பா நகரில் வாழ்ந்த கிறித்தவரும் திருத்தூதர் பணிகள் நூலில் குறிக்கப்படும் நபரும் ஆவார்.[1][2] அக்குறிப்பின்படி இவர் நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் முற்றிலும் ஈடுபட்டிருந்தார். உடல்நலம் குன்றி ஒருநாள் இவர் இறந்துவிட்டார்.

தொற்கா மீண்டும் உயிர் பெறுதல். ஓவியர்: Masolino da Panicale, 1425.

அங்கிருந்த சீடர்கள் யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்பதைக் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, எங்களிடம் உடனே வாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டார்கள். பேதுரு வந்து அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்: அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, தபித்தா, எழுந்திடு என்றார். உடனே அவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார்.

இவ்விவரிப்பின்படி இவரும் கைம்பெண்னாக இருந்திருக்கக்கூடும்[3][4] என்றும் ஏழை எளியோருக்கு உதவியதால் இவர் செல்வந்தராகவும் இருந்திருக்கக்கூடும்[5] என்றும் அறியலாம். மேலும் இவர் யோப்பா நகரின் குறிக்கத்தக்க நபராக இருந்திருக்கக்கூடும்.[5][6] இதனாலேயே பேதுருவும் அழைக்கப்பட்டிருக்கலாம்.

தொற்கா என்னும் கிரேக்கப்பெயர் அரமேயத்தில் தபித்தா என்று வழங்கப்படுகின்றது. இதற்கு பெண் மான் என்பது பொருள்.[7][6] இப்பெயரின் தற்போது மான் வகை ஒன்று (Dorcas gazelle) அழைக்கப்படுகின்றது என்பது குறிக்கத்தக்கது.[8]

கிறித்தவ மரபில்

தொகு

கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி மற்றும் லூத்தரன் திருச்சபையில் அக்டோபர் 25.[9][10] செசாரியா நகர பசீல் இவரை ஒரு எடுத்துக்காட்டாக தனது எழுத்துகளில் குறிப்பிட்டுள்ளார்.[11]

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தொற்கா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


கலையில்

தொகு

இவரின் சித்தரிப்புகள் நான்காம் நூற்றாண்டு முதலே கிடைத்துள்ளன. புனித பேதுருவின் வாழ்வை சித்தரிக்கும் இடங்களில் இவர் உயிர்ப்பிக்கப்படும் நிகழ்வும் குறிக்கப்படுகின்றது. குறிப்பாக மறுமலர்ச்சிகால கலை மற்றும் மத்தியகால கலை ஆகியவற்றில் இவை அதிகம் சித்தரிக்கப்பட்டன.[12][13]

மேற்கோள்கள்

தொகு
  1. 9:36–42
  2. Syswerda, Jean E. (2002). Women of the Bible:52 Bible studies for individuals and groups. Grand Rapids, Mich.: Zondervan. p. 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0310244927.
  3. Bock, Darrell L. (2007). Acts (Baker Exegetical Commentary on the New Testament). Baker Books. p. 378. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1441200266.
  4. Gangel, Kenneth O. (1998). Holman New Testament Commentary - Acts. B&H Publishing Group. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0805402055.
  5. 5.0 5.1 Witherington, Ben (1998). The Acts of the Apostles: A Socio-rhetorical Commentary. Wm. B. Eerdmans. pp. 331–332. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0802845010.
  6. 6.0 6.1 Lockyer, Herbert (1967). All the women of the Bible. Grand Rapids: Zondervan. pp. 46–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0310281512.
  7. திருத்தூதர் பணிகள் 9:36, பொது மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்பு
  8. Hildyard, Anne [ed.] (2001). Endangered wildlife and plants of the world. New York [u.a.]: Marshall Cavendish. p. 606. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761471944. {{cite book}}: |first= has generic name (help)
  9. Kinnaman, Scot A. (2010). Lutheranism 101. St. Louis: Concordia Publishing House. p. 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780758625052.
  10. Sheehan, Thomas W. (2001). Dictionary of Patron Saints' Names. Our Sunday Visitor Publishing. p. 268. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0879735392.
  11. Basil, Saint (1999). Ascetical Works. CUA Press. p. 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0813211093.
  12. Ross, Leslie (1996). Medieval Art: A Topical Dictionary. Greenwood Publishing Group. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313293295.
  13. Earls, Irene (1987). Renaissance Art: A Topical Dictionary. ABC-CLIO. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313293295.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொற்கா&oldid=3581630" இலிருந்து மீள்விக்கப்பட்டது