செசாரியா நகர பசீல்
செசாரியா நகர பசீல் அல்லது புனித பெரிய பசீலியார், (கிரேக்க மொழி: Ἅγιος Βασίλειος ὁ Μέγας; 329 அல்லது 330[1] – ஜனவரி 1, 379) என்பவர் தற்கால துருக்கியில் இருந்த கப்படோசீயா, துருக்கி, அனத்தோலியாவின் செசாரியா நகரின் கிரேக்க கிறித்தவ ஆயராவார். இவர் தம் சமகால கிறித்தவ இறையிலில் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். நைசின் விசுவாச அறிக்கையினை ஆதரித்து ஆரியன் மற்றும் அப்பொலொனாரிசு ஆகியோரின் திரிபுக்கொள்கையினை இவர் எதிர்த்தார். இவர் தனது அரசியல் மற்றும் இறையியல் நம்பிக்கைகளை சமநிலையில் வைக்கும் திறன்மிக்கவராய் இருந்ததால் இவர் நைசின் விசுவாச அறிக்கையின் குறிக்கத்தக்க ஆதரவாளரானார்.
புனித பெரிய பசீல் | |
---|---|
கீவ்வில் உள்ள புனித சோபியா மறைமாவட்ட முதன்மைக்கோவிலில் இருக்கும் புனித பசீலின் திருவோவியம் | |
ஆயர், மற்றும் மறைவல்லுநர்; | |
பிறப்பு | 329 அல்லது 330 செசாரியா, கப்படோசீயா, துருக்கி, |
இறப்பு | ஜனவரி 2, 379 செசாரியா, கப்படோசீயா |
ஏற்கும் சபை/சமயங்கள் | கிழக்கு மற்றும் மேற்கத்திய கிறித்தவம் |
திருவிழா |
|
சித்தரிக்கப்படும் வகை | ஆயர் உடைகளில் |
பாதுகாவல் | உருசியா, கப்படோசீயா, துருக்கி, மருத்துவமனை மேளாளர்கள், துறவிகள், கல்வி, பேயோட்டுதல், திருவழிபாடு |
இறையியல்மட்டும் அல்லாது ஏழை எளியோருக்கு உதவுவதிலும் இவர் புகழ்பெற்றார். இவர் துறவு மடங்களுக்கு அளித்த வழிகாட்டுதல்கள் துறவியரின் கூட்டு வாழ்க்கை, வழிபாட்டு மன்றாட்டு மற்றும் உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் அளித்தது. ஆதலால் இவர் கிழக்கத்திய கிறித்தவ துறவறத்தின் முன்னோடியாகக்கருதப்படுகின்றார். கிழக்கு மற்றும் மேற்கத்திய கிறித்தவம் இவரைப்புனிதர் என ஏற்கின்றன. பசீல், நசியான் கிரகோரி மற்றும் நைசா கிரகோரி ஆகியோர் கூட்டாக கப்போடோசிய தந்தையர்கள் என அழைக்கப்படுகின்றனர். கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் நசியான் கிரகோரி, கிறிசோஸ்தோமோடு சேர்த்து இவரையும் மூன்று புனித தலைவர்கள் (Three Holy Hierarchs) என்னும் அடைமொழியிட்டு அழைக்கின்றது. திருச்சபையின் மறைவல்லுநர் எனக்கருதப்படுகின்றார். இவரை விண்ணக மறைஉண்மைகளை வெளிப்படுத்துபவர் எனப்பொருள்படும் "Ουρανοφαντωρ" என்னும் அடைமொழியிட்டு இவரை அழைப்பர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fedwick (1981), p. 5
- ↑ St Basil the Great the Archbishop of Caesarea, in Cappadocia. Orthodox Church in America Website. http://ocafs.oca.org/FeastSaintsLife.asp?FSID=100003. பார்த்த நாள்: 2007-12-15
- "St. Basil the Great". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.