தொலுவில சிலை

தொலுவில சிலை என்பது, இலங்கையின் பழங்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள தொலுவில என்னும் இடத்தில் 1900 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இருக்கும் நிலையில் உள்ள ஒரு புத்தர் சிலை ஆகும். இது 4ம் நூற்றாண்டு அல்லது 5ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட இச் சிலை, அனுராதபுரத்தில் உள்ள சமாதி புத்தர் சிலையைப் போல, இலங்கையில் மிக நல்ல நிலையில் உள்ள புத்தர் சிலைகளுள் ஒன்று. இச்சிலையின் சில அம்சங்கள் இது மதுரா பாணியைச் சேர்ந்த சிற்பமாக இருக்கலாம் என்ற கருத்தைத் தோற்றுவித்துள்ளது. இச்சிலை தற்போது கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தோற்றமும் இயல்புகளும்

தொகு

தொலுவில புத்தர் சிலை ஒரு சிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றது. அத்துடன் அனுராதபுரத்தில் உள்ள சமாதி புத்தர் சிலையைப் போலவே பழங்கால இலங்கையின் சிற்பக்கலைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. இது தனிக் கருங்கல்லில் செய்யப்பட்டது. 1.75 மீட்டர் (5 அடி 9 அங்குலம்) உயரம் கொண்ட இச் சிலை சமாதி சிலையை விடச் சற்றே சிறியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலுவில_சிலை&oldid=2222029" இலிருந்து மீள்விக்கப்பட்டது