கொழும்பு தேசிய அருங்காட்சியகம்
கொழும்பு தேசிய அருங்காட்சியகம் அல்லது கொழும்பு தேசிய நூதனசாலை (National Museum of Colombo) இலங்கையின் மிகப் பெரிய அருங்காட்சியகம் ஆகும். இதனை இலங்கை அரசின் நூதனசாலைகள் திணைக்களம் நிர்வாகிக்கின்றது.[1][2][3]
நிறுவப்பட்டது | சனவரி 1, 1877 |
---|---|
அமைவிடம் | கொழும்பு, இலங்கை |
வலைத்தளம் | www.museum.gov.lk |
வரலாறு
தொகுஇலங்கையில் ஒரு நூதனசாலை அமைக்கவேண்டியதன் தேவையை உணர்ந்து அப்போதைய இலங்கையில் பிருத்தானிய ஆளுனராக இருந்த வில்லியம் கிரகரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் பின்னர் அனுமதி கிடைத்து 1877, சனவரி 1 இல் அருங்காட்சியகம் அமைத்து முடிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் இத்தாலியக் கட்டடக்கலையை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1876 இல் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தாலும் ஒரு ஆண்டு கழிந்தே இவ்வருங்காட்சியகம் இயக்கத்திற்கு வந்தது.
இதன் வளர்ச்சியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி ஆகிய இடங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன.
கண்டி இராச்சியத்தின் இறுதி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் முடியும் பிரித்தானிய அரசிடம் இருந்து மீளப்பெற்று இங்கே வைத்துப் பேணப்படுகின்றது.
வெளியிணைப்புகள்
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ "ICTA & National Museum launch Sri Lanka museums mobile app". Lanka Business Online. 15 March 2017. http://www.lankabusinessonline.com/icta-national-museum-launches-sri-lanka-museums-mobile-app/.
- ↑ Silva, Dhananjani (22 March 2009). "Swords and fire power add to new-look museum". Sunday Times. http://www.sundaytimes.lk/090322/Plus/sundaytimesplus_02.html.
- ↑ Jayawardane, Ishara (12 October 2017). "Magnificent historical haven". Daily News. http://www.dailynews.lk/2017/10/12/features/130974/magnificent-historical-haven.