தொல்லியல் அருங்காட்சியகம், புராண கிலா

தொல்லியல் அருங்காட்சியகம், புராண கிலா, இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில் உள்ள புராண கிலாவில் உள்ளது. இந்திய தொல்லியல் ஆய்வகம் இப்பகுதியில், 1955 ஆம் ஆண்டிலும் பின்னர் 1969 முதல் 1973 வரையிலான காலப்பகுதிகளிலும் அகழ்வாய்வுகளை மேற்கொண்டது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் பெரும்பாலும் இந்த அகழ்வாய்வுகள் மூலம் கிடைத்தவையே. அகழ்வாய்வுகள் இப்பகுதியில் கிமு 1000 ஆண்டுகாலப் பகுதியில் இருந்து தொடர்ச்சியான பண்பாட்டுத் தொடரை வெளிப்படுத்தின. இங்கே வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த பொருட்களும், மௌரியர் காலம் முதல், சுங்கர், குசாணர், குப்தர், ராசபுத்திரர், சுல்தானகக் காலத்தினூடாக முகலாயர் காலம் வரையும் உள்ள காலப்பகுதிகளைச் சேர்ந்த அரும்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு