தொழுவூர் வேலாயுத முதலியார்
தொழுவூர் வேலாயுத முதலியார் 1832 ஆம் ஆண்டு (நந்தன, ஆவணி 9) செங்கல்பட்டு மாவட்டம், ஈக்காட்டுக் கோட்டம், சிறுகடல் (தொழுவூர் அஞ்சல் நிலையம் அருகிலுள்ளது) எனும் ஊரில் பிறந்தார்.[1] பெற்றோர்: செங்கல்வராய முதலியார் - ஏலவார்குழலி. வடலூர் இராமலிங்க சுவாமிகளின் மாணவராக இருந்து அவரிடம் தமிழ் கற்றார்.
சிறப்புகள்
தொகுஇராமலிங்க அடிகள் எனும் பெயருக்குச் சிறப்புப் பெயராக, திருவருட்பிரகாச வள்ளலார் எனும் பெயரிட்ட பெருமை வேலாயுதத்தையேச் சாரும். இவர் காலத்தில் நிகழ்ந்த அருட்பா மருட்பாக் கட்சிகளில், மருட்பாக் கட்சியார் எழுதிய போலியருட்பா மறுப்பு எனும் நூலுக்கு மறுப்பாக, போலியருட்பா மறுப்பென்னும் குதர்க்காரண்ய நாசமகாபரசு எனும் நூலை எழுதினார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவருக்கு, இராமலிங்க அடிகளார், உபய கலாநிதி எனும் பட்டம் தந்துள்ளார்.
இயற்றிய வசனநூல்கள்
தொகு- பராசரஸ்மிருதி(ஆசார காண்டம்)
- சங்கர விஜய வசனம்
- மார்க் கண்டேய புராண வசனம்
- பெரியபுராண வசனம்
- வேளாண் மரபியல்
- திருவெண்காட்டடிகள் வரலாறு
- விநாயகர் சதுர்த்தி விரதம்
- போசராசன் சரிதம்
- மகாவீர சரித்திரம்.
செய்யுள் நூல்கள்
தொகு- திருவருட்பிரகாசர் சந்நிதிமுறை
- திருப்பாதப் புகழ்ச்சிமாலை
- சித்திர யமக அந்தாதி
- திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி
- திருத்தணிகை நான்மணிமாலை
- திருத்தணிகை மும்மணிக்கோவை
- திருப்போரூர் கவிவிண்ணப்பம்
- மகிழ்மாக்கலம்பகம்
- வடிவுடையம்மன் சவுந்தரியாட்டகம்
- சிவஞான பாலைய தேசிகர் மும்மணிக்கோவை
- நெஞ்சராற்றுப்படை
- தாதகுருநாதர் கலிமாலை.
சமாதி
தொகுஇவர் 21-02-1889 அன்று திருவொற்றியூரில் சமாதி அடைந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "VallalarSpace - Anandha Barathi - தொழுவூர் வேலாயுத முதலியார் - வாழ்க்கை வரலாறு - The History of Thozhvur Velautha Muthaliyar". www.vallalarspace.org. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
உசாத்துணை
தொகு- மயிலை சீனி. வேங்கடசாமி,"19 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்" மெய்யப்பன் தமிழாய்வகம்-2001.