தோகியன் மான் பன்றி
தோகியன் மான் பன்றி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
குடும்பம்: | சூயிடே
|
துணைக்குடும்பம்: | பேபிரவுசினே
|
பேரினம்: | பேபிரவுசா
|
இனம்: | தோக்கியன்சிசு
|
பரம்பல் பழுப்பு நிறத்தில் |
தோகியன் மான் பன்றி (Togian babirusa) என்பது மாலெங்கே மான் பன்றி என்றும் அழைக்கப்படுகிறது. இது (பேபிரவுசா தோக்கியன்சிசு), மான் பன்றி சிற்றினங்களில் மிகப்பெரிய இனமாகும்.[3][4] இது இந்தோனேசியா தோகியன் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் 2002 வரை இந்த மான் பன்றி பேபிரவுசா பேபிருசாவின் ஒரு துணையினமாகக் கருதப்பட்டது.[1] நன்கு அறியப்பட்ட வடக்கு சுலவேசி பாபிரசாவுடன் ஒப்பிடும்போது, தோகியன் மான் பன்றி பெரியது. நன்கு வளர்ந்த வால்-குஞ்சம் உள்ளது. மேலும் ஆணின் மேல் கோரைப் பற்கள் ஒப்பீட்டளவில் "குறுகியவை, மெல்லியவை, முன்னோக்கிச் சுழன்று காணப்படும்.[5][6] தோகியன் மான் பன்றி அனைத்துண்ணி வகையின. இவை முக்கியமாகக் கிழங்குகள் மற்றும் விழுந்த பழங்களை உணவாகக் கொண்டுள்ளது. ஆனால் புழுக்கள் மற்றும் முதுகெலும்பற்ற விலங்குகளையும் உணவாகக் கொள்கிறது.[7] மற்ற பன்றி இனங்களைப் போலல்லாமல், தோகியன் மான் பன்றி கிழங்குகளை தன் மூக்கினைப் பயன்படுத்தித் தோண்டாமல், வேரோடு பிடுங்குவதற்காகக் காலினைப் பயன்படுத்தும்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Macdonald, A.; Leus, K.; Masaaki, I.; Burton, J. (2016). "Babyrousa togeanensis". IUCN Red List of Threatened Species 2016: e.T136472A44143172. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T136472A44143172.en. https://www.iucnredlist.org/species/136472/44143172. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ "ADW: Babyrousa: CLASSIFICATION". animaldiversity.org.
- ↑ "COMMISSION REGULATION (EC) No 407/2009 of 14 May 2009 amending Council Regulation (EC) No 338/97 on the protection of species of wild fauna and flora by regulating trade therein". Official Journal of the European Union. 2009-05-19. p. L 123/3.
- ↑ Meijaard, E.; Groves, C. P. (2002). "Upgrading three subspecies of Babirusa (Babyrousa sp.) to full species level". IUCN/SSC Pigs, Peccaries, and Hippos Specialist Group (PPHSG) Newsletter 2 (2): 33–39. https://www.researchgate.net/publication/236898577. பார்த்த நாள்: 12 March 2023.
- ↑ Meijaard, E., J. P. d'Huart, and W. L. R. Oliver
- ↑ 7.0 7.1 Ito, Masaaki; Melletti, Mario (2017), "Togian Babirusa Babyrousa togeanensis (Sody, 1949)", Ecology, Conservation and Management of Wild Pigs and Peccaries, Cambridge University Press, pp. 76–84, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/9781316941232.010, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-316-94123-2, பார்க்கப்பட்ட நாள் 2021-03-26