தோக்கியோ கோபுரம்

தோக்கியோ கோபுரம் அல்லது டோக்கியோ கோபுரம் (Tokyo Tower (東京タワー Tōkyō tawā?) என்பது சப்பானின் மினடோ மாவட்டத்தில் அமைந்துள்ள தொடர்பாடல், அவதானிப்புக் கோபுரமாகும். 332.9 மீட்டர்கள் (1,092 அடி) உயரமுள்ள இது சப்பானில் இரண்டாவது உயரமான கட்டமைப்பாகும். பாரிசு நகரத்திலுள்ள ஈபெல் கோபுரம் போன்ற பின்னல் அமைப்புக் கோபுரக் கட்டமைப்புப் பாணியில் இக்கோபுரம் கட்டப்பட்டுள்ளது. வான் பாதுகாப்பு முறைக்கமைவாக வெள்ளை, செம்மஞ்சள் நிறங்களுடன் காணப்படுகிறது.

தோக்கியோ கோபுரம்
東京タワー
2011 இல் தோக்கியோ கோபுரம்
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
வகைதொடர்பாடல், அவதானிப்புக் கோபுரம்
இடம்4-2-8 மினடோ 105-0011
கட்டுமான ஆரம்பம்சூன் 1957
நிறைவுற்றது1958
திறப்புதிசம்பர் 23, 1958
செலவு¥2.8 பில்லியன்
(US$8.4 மில்லியன் [1958])
உரிமையாளர்நிகோன் டென்பட்டோ
(நிப்போன் தொலைக்காட்சி நகர கூட்டுத்தாபனம்)
உயரம்
கட்டிடக்கலை333 m (1,093 அடி)
அலைக்கம்ப கோபுரம்332.9 m (1,092 அடி)[1]
மேல் தளம்249.6 m (819 அடி)
கண்காணிப்பகம்249.6 m (819 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை16
உயர்த்திகள்4
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)தாச்சி நைடோ[3]
அமைப்புப் பொறியாளர்நிக்கென் செக்கேய்[2]
முதன்மை ஒப்பந்தகாரர்டேகெனக்கா[3]

1958 இல் கட்டிமுடிக்கப்பட்ட இக்கோபுரத்தின் பிரதான வருவாய் மூலமாக உல்லாசப்பயணத்துறையும் அலைக்கம்பக் குத்தகையும் உள்ளன. இது திறக்கப்பட்டதிலிருந்து 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர். அக்கோபுரத்தின் கீழாக நான்கு மாடிக் கட்டடம் அமைந்துள்ளது. அதில் நூதனசாலை, கடைகள், உணவு விடுதிகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர் இரு அவதானிப்பு மேல் தளங்களுக்குச் செல்ல முடியும். 150 மீட்டர்கள் (490 அடி) உயரத்தில் பிரதான இரண்டு மாடி வானிலை ஆய்வுக் கூடங்கள் உள்ளன. சிறியளவில் சிறப்பு வானிலை ஆய்வுக் கூடம் 249.6 மீட்டர்கள் (819 அடி) உயரத்தில் உள்ளது.

அலைக்கம்பத்திற்கான உதவிக் கட்டமைப்பாகக் கோபுரம் செயற்படுகிறது. 1961 இல் தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானொலி அலைக்கம்பம் என்பவற்றைக் கருத்தில் கொண்டே நிறுவப்பட்டது ஆயினும், தற்போது சப்பானிய ஊடகங்களான புஜி தொலைக்காட்சி, தோக்கியோ தொலைக்காட்சி போன்றவற்றின் ஒளிபரப்பை வெளியிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. 2011 இல் சப்பான் எண்மியத் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் திட்டமிட்ட போதிலும், அது முடியாமல் போய்விட்டது. ஆயினும், 332.9 m (1,092 அடி) உயரமுள்ள தோக்கியோ கோபுரம் எண்மியத் தொலைக்காட்சிக்கு முற்றிலும் ஏற்றதாக இல்லை. மிக உயரமான எண்மிய ஒளிபரப்புக் கோபுரமான டோக்கியோ இசுக்கை றீ பெப்ரவரி 29, 2012 அன்று திறக்கப்பட்டது.

கட்டுமானம்

தொகு

1953 அல் சப்பானின் பொது ஒளிபரப்பு நிலையம் ஆரம்பித்த பின் கன்டோ பிரதேசத்தில் பெரிய ஒளிபரப்புக் கோபுரத்திற்கான தேவை இருந்தது. தனியார் ஒளிபரப்பு நிறுவனங்கள் சப்பான் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கோபுரக் கட்டுமானத்தைத் தொடர்ந்து தங்கள் ஒளிபரப்பை அதில் இயக்கத் தொடங்கின. இந்தத் தகவல் தொடர்பு முக்கித்துவத்தினால் சப்பானிய அரசாங்கம் தோக்கியோவில் ஒளிபரப்புக் கோபுரங்கள் விரைவில் கட்டப்படும் என்ற நம்பிக்கைக்கு வழிவகுத்தது. பிராந்தியம் முழுவதற்குமான பாரிய ஒளிபரப்புக் கோபுரக் கட்டுமானமே தீர்வு என்ற முடிவுக்கு வரவேண்டியதாயிற்று.[4] அத்துடன், 1950 களில் அந்நாட்டின் போருக்குப் பின்னான பொருளாதார உயர்வினால், சப்பான் ஒரு உலகப் பொருளாதார ஆற்றலைக் குறிப்பதாக ஒரு நினைவுச்சின்னம் தேடிச் செய்தது.[5][6]

381 மீட்டகள் உயரமுடைய உலகின் உயரமான கட்டமைப்பாகவிருந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைவிட உயரமான கோபுரமாக உருவாக்க, கோபுரத்தின் சொந்தக்காரரான கிசாகிச்சி திட்டமிட்டிருந்தார். ஆயினும் நிதி, கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை என்பவற்றால் திட்டம் கைவிடப்பட்டது. கோபுர உயரம் கான்டொ பிராந்தியம் முழுவதற்கும் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர்கள் (93 mi) தொலைவில் உள்ள தொலைக்காட்சி நிலையங்களின் தொலைவுத் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட்டது. புதிதாக முன்மொழியப்பட்ட கோபுரத்தை நிர்மாணிக்க சப்பானின் உயரமான கட்டட வடிவமைப்பாளர் தாச்சி நைடோ தெரிவு செய்யப்பட்டார்.[4] மேற்கத்தைய ஊக்கத்தினால் கவரப்பட்ட நைடோ, பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபெல் கோபுரத்திற்கு ஏற்ப வடிவமைத்தார்.[7] நிக்கென் செக்கேய் நிறுவனத்தின் உதவியுடன், நைடோவின் வடிவமைப்பு நிலநடுக்கங்களையும், மணிக்கு 220 கி.மீ (140 mph) வேகமுள்ள சூறாவளியையும் எதிர் கொண்டு நிற்கிறது.[4]

உசாத்துணை

தொகு
  1. "Tokyo Tower gets shorter for the 1st time". பார்க்கப்பட்ட நாள் 2012-07-23.
  2. "Structural Engineering". Nikken Sekkei. Archived from the original on 2008-04-21. பார்க்கப்பட்ட நாள் 2008-04-11.
  3. 3.0 3.1 "Tokyo Tower". Emporis. பார்க்கப்பட்ட நாள் 2008-04-11.
  4. 4.0 4.1 4.2 Gilhooly, Rob (March 17, 2002). "The tower and the story". The Japan Times. பார்க்கப்பட்ட நாள் November 11, 2013.
  5. Bruan, Stuart. "Big in Japan:Tokyo Tower". Metropolis. Archived from the original on 2008-06-10. பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
  6. Ito, Masami (December 30, 2008). "Half century on, Tokyo Tower still dazzles as landmark". The Japan Times. பார்க்கப்பட்ட நாள் 2009-01-21.
  7. "Tokyo Tower 東京タワー". SkyscraperPage. பார்க்கப்பட்ட நாள் 2008-03-29.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tokyo Tower
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோக்கியோ_கோபுரம்&oldid=3559713" இலிருந்து மீள்விக்கப்பட்டது