தோங்கா லா கணவாய்
தோங்கா லா கணவாய் (Dongkha la) [1][2][3] என்பது இமயமலையில் 5534 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மிக உயர்ந்த ஒரு கணவாய் ஆகும். இக்கணவாய் இந்தியாவிலுள்ள சிக்கிம் மாநிலத்தை திபெத்துடன் இணைக்கிறது. தோங்கியா கணவாய் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள்.
தோங்கா லா | |
---|---|
ஏற்றம் | 18,000 அடி (5,486 மீ) |
அமைவிடம் | சிக்கிம், இந்தியா திபெத் |
மலைத் தொடர் | இமயமலை |
வடக்கு சிக்கிம்மில் அமைந்திருக்கும் இக்கணவாயிலிருந்து திபெத் பீடபூமியை பார்க்க முடியும். தோங்கா லா கணவாய்க்கு அருகில் அமைந்துள்ள திசோ லாமோ ஏரி 6.5 கிலோமீட்டர் நீளமும் 2.5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஏரியாக காணப்படுகிறது [4]. இந்த ஏரியே தீசுட்டா ஆற்றுக்கு நீர் வழங்கும் முக்கிய மூலமாகும். குருதோங்மார் ஏரியும் தீசுட்டா ஆற்றுக்கு நீர் வழங்குகிறது. 1849 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் தோங்கா லா கணவாயை இவர் கடந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Joshi, H.G. (15 October 2004). Sikkim ; Past and Present. New Delhi, India: Mittal Publications. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-932-4. பார்க்கப்பட்ட நாள் 2009-09-11.
- ↑ Hooker, Joseph Dalton (15 October 2008). Himalayan Journals, Notes of a Naturalist: In Bengal, The Sikkim and Nepal Himalayas, The Khasia Mountains, Etc. Forgotten Books. p. 637. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60620-983-7. Archived from the original on 2012-03-07. பார்க்கப்பட்ட நாள் 2009-09-11.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|4=
(help) - ↑ Hooker, Joseph Dalton (15 October 2008). Himalayan Journals, Notes of a Naturalist: In Bengal, The Sikkim and Nepal Himalayas, The Khasia Mountains, Etc. Forgotten Books. p. 619. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60620-983-7. Archived from the original on 2012-03-07. பார்க்கப்பட்ட நாள் 2009-09-11.
- ↑ Krishnan, J. K (2005). Academic Dictionary of Tourism. Delhi, India: Isha Books. p. 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8205-259-8. பார்க்கப்பட்ட நாள் 2009-09-11.