தோசிஹைட் மசகாவா

தோசிஹைட் மசகாவா ('Toshihide Maskawa) (பிறப்பு பிப்ரவரி 7, 1940) நகோயா, ஜப்பானில் பிறந்தார். இவர் ஒரு ஜப்பானிய தத்துவார்த்த இயற்பியலாளர் ஆவார். துகள் இயற்பியலில் ஏற்றம்-இணை சமச்சீர் மீறல் (CP-Violation) குறித்த இவரது பணிக்காக 2008 ஆம் ஆண்டிற்கான இயற்பியலிற்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது. "உடைந்த சமச்சீரின் தோற்றம் குறைந்தபட்சம் மூன்று குவார்க்கு குடும்பங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதை கண்டுபிடித்ததற்காக" இப்பரிசைப் பெற்றார்.[1] மேலும் பரிசுத்தொகையில் மூன்றில் ஒரு பங்கைப் பெற்றார்.

益川 敏英
தோசிஹைட் மசகாவா
Maskawa in 2008
பிறப்புபெப்ரவரி 7, 1940 (1940-02-07) (அகவை 84)
நகோயா, ஜப்பான்
வாழிடம்ஜப்பான்
தேசியம்ஜப்பான்
துறைஉயர் ஆற்றல் இயற்பியல்
பணியிடங்கள்நகோயா பல்கலைகழகம்
கயோடோ பல்கலைகழகம்
கயோடோ சான்கயோ பல்கலைகழகம்
கல்வி கற்ற இடங்கள்நகோயா பல்கலைகழகம்
ஆய்வு நெறியாளர்சோசி சகாடா
அறியப்படுவதுCP-மீறல் குறித்த ஆய்வுப்பணி
CKM matrix
விருதுகள்சாகுராய் பரிசு (1985)
ஜப்பான் அறிவியல் கழகப் பரிசு (1985)
அசாஹி பரிசு (1994)
இயற்பியல் நோபல் பரிசு (2008)

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

1962 ஆம் ஆண்டு தோசிஹைட் நகோயா பல்கலைகழகத்தில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் 1967 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் (PhD) துகள் இயற்பியலில் சோசி சகாடாவின் வழிகாட்டுதலில் நகோயா பல்கலைகழகத்தில் பெற்றார்.

ஆய்வுப் பணி தொகு

1970 களின் தொடக்கத்தில் கியோட்டோ பல்கலைக்கழகத்தில், மகோடோ கோபயாஷியுடன் இணைந்து மாதிரி துகள் இயற்பியலில் உடைந்த சமச்சீர்மை (CP - மீறல்) பற்றி ஆய்வில் தோசிஹைடும் ஒத்துழைத்தார். மசகாவா மற்றும் கோபயாஷி கோட்பாடு குறைந்தபட்சம் மூன்று தலைமுறை குவார்க்குகள் இருப்பதாகக் கண்டறிந்தது, இது நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கீழ் குவார்க்கின் பரிசோதனைகள் மூலம் இந்த கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

மசகாவா மற்றும் கோபாயாசியின் 1973 ஆம் ஆண்டு "பலவீனமான பரஸ்பர எதிர்வினை மறுசீரமைப்பு கோட்பாட்டின் CP மீறல்" கட்டுரை வெளியானது.[2] இந்தக் கட்டுரை மிக உயர்ந்த ஆற்றல் இயற்பியல் துறையின் மிகச் சிறந்த நான்காவது கட்டுரையாக மதிப்பிடப் பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "The Nobel Prize in Physics 2008". The Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2009-10-17.
  2. M. Kobayashi, T. Maskawa (1973). "CP-Violation in the Renormalizable Theory of Weak Interaction". Progress of Theoretical Physics 49 (2): 652–657. doi:10.1143/PTP.49.652. Bibcode: 1973PThPh..49..652K. 
  3. "Top Cited Articles of All Time (2010 edition)". SLAC. 2009. பார்க்கப்பட்ட நாள் 2014-06-21.

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோசிஹைட்_மசகாவா&oldid=2713028" இலிருந்து மீள்விக்கப்பட்டது