தோட்டக்கலை சிகிச்சை
தோட்டக்கலை சிகிச்சை (Horticultural therapy) அல்லது சமூக மற்றும் சிகிச்சைத் தோட்டக்கலை (social and therapeutic horticulture, STH) என்பது ஒரு நபரின் தோட்டக்கலை மற்றும் தாவர அடிப்படையிலான செயல்பாடுகளில் அவரின் ஈடுபாடு, பயிற்சி பெற்ற சிகிச்சை அளிப்பவரால் எளிமைப்படுத்தப்பட்டு அவர் தன் குறிப்பிட்ட சிகிச்சை அளிக்கும் இலக்குகளை அடைதல் என்று அமெரிக்க தோட்டக்கலை சிகிச்சை சங்கம் வரையறுக்கிறது. தாவரங்களின் அழகுணர்ச்சி காட்சியானது மன அமைதியின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இது வாழ்வின் அர்த்தமுள்ள பாராட்டுக்கு நேர்மறை உணர்ச்சிகளை உருவாக்குகிறது.
தாவரங்களின் நேரடித் தொடர்பு வாழ்க்கைத் தரத்தை ஒட்டுமொத்தமாக அதிகரிக்கச் செய்து மன அழுத்தத்தைக் குறைக்க தனிப்பட்ட கவனம் செலுத்துகிறது.[1] நிறுவப்பட்ட சிகிச்சைச் திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் சூழலில் தோட்ட சிகிச்சை செயல்திறன் மிக்க திட்டம் என்று அமெரிக்க தோட்டக்கலை சிகிச்சை சங்கம் நம்புகிறது. தோட்டக்கலை சிகிச்சையாளர்கள் சிறப்பாக கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட உறுப்பினர்கள், மறுவாழ்வு அணிகள் (மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், தொழில் சார்ந்த சிகிச்சையாளர்கள் மற்றும் பிறருடன்) தோட்டத்தொழிலின் எல்லாக் கட்டங்களிலும் வாடிக்கையாளர்களை ஈடுபடுத்துதன் மூலம், தயாரிப்பை விற்பனை செய்வதில் இருந்து அவர்களின் வாழ்வின் முன்னேற்றத்தை கொண்டு வருகிறது.
வரலாறு
தொகுஅமெரிக்க தோட்டக்கலை சிகிச்சை சங்கத்தின்படி, பண்டைய கால எகிப்திய மருத்துவர்கள் பரிந்துரையின்படி மனநல குறைபாடுடைய நோயாளிகள் ஒரு தோட்டத்தை சுற்றி நடக்கிறார;கள். இது அலெக்சாந்திரியா மற்றும் பண்டைய எகிப்தில் மறுமலர்ச்சிக் கால ஐரோப்பா வழியாக வந்த சிகிச்சை முறையின் முதல் அறிகுறி அடையாளமாகக் காட்டப்பட்டது..[1]
அறிக்கை ஆவணம்
தொகுஅமெரிக்க தோட்டக்கலை சிகிச்சை சங்கம் தோட்டக்கலை சிகிச்சை முறையைப் பயிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. சில கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தோட்டக்கலை சிகிச்சையில் கல்வித்திட்டங்களைக் கொண்டுள்ளன. அவை அமெரிக்க தோட்டக்கலை சிகிச்சை சங்கம் மூலம் அங்கீகரிக்கப்படுகிறது.