தோணியக்காவு பத்ரகாளி கோயில்
தோணியக்காவு பத்ரகாளி கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள புத்தன்பீடிகா என்ற கிராமத்தில் உள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும் . இக்கோயிலின் மூலவர் பத்ரகாளி ஆவார்.
கேரளாவின் கட்டிடக்கலைப் பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோயில் உள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஆராட்டுப்புழா கோயிலில் நடைபெறுகின்ற ஆராட்டுப்புழா பூரம் விழாவில் இந்த கோயில் பங்கேற்கிறது. "தேவமேளா" என்றும் அழைக்கப்படுகின்ற பூரம், "தெய்வங்களின் கூட்டம்" என்று பொருள்படும். அக்கம் பக்கத்திலுள்ள சன்னதிகளில் இருந்து பெருமளவிலான தெய்வங்கள் இங்கு வருவதைக் காணலாம். இக்கோயிலில்விக்னேஸ்வரன் (கணபதி ), வீரபத்ரன், கந்தகர்ணன் உள்ளிட்டோருக்கு துணைச்சன்னதிகள் உள்ளன. [1]
இக்கோயிலின் மூலவர் பெரிங்கோட்டுக்கரைக்கு அருகில் உள்ள திருவாணிகாவு கோயிலின் சகோதர தெய்வமாகக் கருதப்படுகிறார். [2]
வரலாறு
தொகுஆரம்பத்தில் கோயில் திருவாணிக்காவு கோயிலுக்கு அருகில் கட்டப்பட்டது. இருப்பினும், தேவபிரஸ்னத்திற்குப் பிறகு பகவதிக்கான புதிய கோயிலுக்கான இடத்தைக் காட்டினார். இது தோணியாகாவு என்னுமிடத்தில் உள்ளது. மலையாளத்தில் "தோனியா" என்றால் உணர்வு அல்லது உள்ளுணர்வு. "காவு" என்றால் கேரளாவின் மலபார் கடற்கரை முழுவதும் உள்ள புனித தோப்புகள். எனவே, கோயிலின் பெயருக்கான பொருள் 'தேவியானவள் தன் கோயில் அமைய விரும்ப கோயிலைக் கட்டிய தோப்பு' என்று பொருள்படும்.
நிர்வாகம்
தொகுஅக்டோபர் 2020 இல், தோணிக்கடவு கோவில் நாயர் குடும்பங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் உள்ளூர்வாசிகளின் நிர்வாகத்தில் இருந்தது. தற்போது இக்கோயில்கோயில் கொச்சி தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
திருவிழா
தொகுபரணி திருவிழாவின் போது இங்கு, மதியம் மற்றும் இரவில் ஐந்து யானைகளுடன் பாரம்பரிய பூரம் நடக்கிறது. "விளக்கெழுநல்லாத்" என்ற நிகழ்வும் இங்கு நடைப்றுகிறது. அப்போது பாரம்பரிய விளக்குகள் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.ஆராட்டுப்புழா பூரம் திருவிழாவின் போது, திருவிழாவைக் காண தெய்வம் ஆராட்டுப்புழாவுக்குச் செல்வதாக நம்பப்படுகிறது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "thoniyakavum thiruvanikavum". பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.
- ↑ "gazate government of kerala". Gazate Government of Kerala (egazette.kerala.gov): first page. 2008-12-06. http://www.egazette.kerala.gov.in/pdf/2008/52/part4/devaswam.pdf.
- ↑ "തോന്നിയകാവ് അശ്വതിവേല ഇന്ന് …" (in ml). Mathrubumi. 10 March 2019. https://www.mathrubhumi.com/Thrissur/news/article-1.3634192.