தோன்சே ஆனந்த் பை
தோன்சே ஆனந்த் பை (Tonse Ananth Pai|T. A. Pai) (சுருக்கமாக: டி. ஏ. பை), (17 சனவரி 1922 – 29 மே 1981) சிண்டிகேட் வங்கியின் வளர்ச்சிக்கு துணை நின்றவரும், அதன் பொது மேலாளராகவும், தலைவராகவும் இருந்தவர். மணிபால் டி. ஏ. பை மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நிறுவுநரும் ஆவார்.[1][2]
தோன்சே ஆனந்த பை | |
---|---|
ತೊನ್ಸೆ ಅನಂತ ಪೈ | |
தாய்மொழியில் பெயர் | ತೊನ್ಸೆ ಅನಂತ ಪೈ |
பிறப்பு | 17 சனவரி 1922 |
இறப்பு | 29 மே 1981 |
தேசியம் | இந்தியர் |
பணி | வங்கியாளர் |
பெற்றோர் | தோன்சே உபேந்திர பை |
உறவினர்கள் | தோன்சே ரமேஷ் உபேந்திரா பை |
வங்கிப் பணியில்
தொகுஇவரது உறவினர் நிறுவிய சிண்டிகேட் வங்கியில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த டி. ஏ. பையை இந்திய அரசு 1970-இல் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைவராக நியமித்தது. பெங்களூரு இந்திய மேலாண்மை கழகத்தின் முதலாவது தலைவராக டி. ஏ. பை நியமிக்கப்பட்டார்.[3]
அரசியல்
தொகு1972-இல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசின் இரயில்வே, கனரகத் தொழில்கள், உருக்கு மற்றும் சுரங்கத் துறைகளின் அமைச்சராக செயல்பட்டவர். 1977-இல் உடுப்பி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
விருதுகள்
தொகு1972-இல் டி. ஏ. பைக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி பாராட்டியது.[4] டி. ஏ. பைக்கு 1973-இல் கர்நாடகப் பல்கலைக்கழகமும், 1975-இல் ஆந்திரா பல்கலைக்கழகமும் கௌரவ டாக்டர் விருது வழங்கி பாராட்டியது.