தோப்ச்சஞ்சி வனவிலங்கு காப்பகம்
தோப்ச்சஞ்சி வனவிலங்கு காப்பகம் (Topchanchi Wildlife Sanctuary) என்பது சார்க்கண்டின் தோப்ச்சஞ்சி நகருக்கு அருகில் அமைந்துள்ள 8.75 கி. மீ. பாதுகாக்கப்பட்ட பகுதி. இந்தச் சரணாலயம் தேசிய நெடுஞ்சாலை 2க்கு அருகில் அமைந்துள்ளது.[1] இக்காப்பகத்தில் உள்ள நிலம் முக்கியமாக உலர்ந்த கலப்பு இலையுதிர் காடுகளுடன் வறண்ட தீபகற்ப சால் காடுகளைக் கொண்டுள்ளது.[2]
தோப்ச்சஞ்சி வனவிலங்கு காப்பகம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
அமைவிடம் | தோப்ச்சஞ்சி, சார்க்கண்டு, இந்தியா |
அருகாமை நகரம் | தன்பாத், இந்தியா |
ஆள்கூறுகள் | 23°48′57″N 85°21′09″E / 23.8159023°N 85.3524122°E |
பரப்பளவு | 2,162 ஏக்கர்கள் (8.75 km2) |
தாவரங்களும் விலங்குகளும்
தொகுவறண்ட தீபகற்ப சால் காடுகள் முக்கியமாகச் சால் மரங்களால் ஆனவை. இருப்பினும் மூங்கில் மற்றும் புல் போன்ற பிற தாவரங்கள் காடற்ற சமவெளிகளில் உள்ளன.[1][2] இந்தச் சரணாலயத்தில் காணப்படும் பாலூட்டிகளில் சிறுத்தை, காட்டுப்பூனை, கேளையாடு, காட்டுப்பன்றி ஆகியவை அடங்கும்.
தோப்சஞ்சி ஏரி இப்பகுதியின் பன்முகத்தன்மையை அதிகரிக்கிறது, மேலும் புலம்பெயர்ந்த பறவைகள் குளிர்காலத்தில் நிறுத்தப்படுகின்றன.[3]
படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Topchanchi Lake | District Dhanbad, Government of Jharkhand | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.
- ↑ 2.0 2.1 "Topchanchi". forest.jharkhand.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.
- ↑ "Topchanchi getting a makeover as tourist destination". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.