தோப்பு வெங்கடாச்சலம்
தோப்பு வெங்கடாச்சலம் ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர். பெருந்துறை தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] பதினான்காவது சட்டமன்றத்தில் தமிழக அரசின் வருவாய்த் துறை அமைச்சராக பணியாற்றினார்.[2] 2016 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அதிமுகவினால் மறுக்கப்பட்டதால், இவர் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[3]
தோப்பு வெங்கடாச்சலம் | |
---|---|
வருவாய்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு | |
பதவியில் 2011–2016 | |
முன்னையவர் | இ. பெரியசாமி |
பின்னவர் | ஆர். பி. உதயகுமார் |
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் 2011–2021 | |
முன்னையவர் | C. பொண்ணுதுரை |
பின்னவர் | S. ஜெயக்குமார் |
தொகுதி | பெருந்துறை |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
இவர் 11 ஜூலை 2021 அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
- ↑ "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
- ↑ இளங்கோவன்,க .தனசேகரன், நவீன். "சுயேச்சையாகக் களமிறங்கும் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்? - ஈரோடு அதிமுக-வில் பரபரப்பு". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.