தோரோத்தி பிசர்

மாற்ரு இதயம் தானமாகப் பெற்றவர்கள்

தோரோத்தி பிசர் (Dorothy Fischer) மாற்று இதயத்தை தானமாகப் பெற்று நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்த தென் ஆப்பிரிக்க பெண் என்ற சிறப்புக்கு உரியவராவார்.

குழந்தையாக இருந்தபோது தோரோத்திக்கு வாதக் காய்ச்சல் ஏற்பட்டது. தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் இக்காய்ச்சலால் தோரோத்தியின் இதயம் சேதமடைந்தது. 1969 ஆம் ஆண்டு இதயப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தோரோத்தி மெல்ல மெல்ல இறந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். [1] இதே ஆண்டு ஏப்ரல் மாதம் 17 அன்று மருத்துவர் கிறித்தியன் பர்னார்ட்டு மற்றும் அவரது குழுவினர் தோரோத்திக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். [1][2][3] அறுவைசிகிச்சைக்குப் பிறகு தோரோத்தி பன்னிரெண்டரை ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். [2] வேற்றுத் திசுக்களை உடல் நிராகரிக்கிறது என்ற போதிலும், இதய மாற்று அறுவை சிகிச்சைகள் ஒரு நீண்டகால நலம் பயக்கும் சிகிச்சையாக இருக்கும் என்பதற்கான ஆதாரமாக தோரோத்தியை பர்னார்ட்டு எடுத்துக்காட்டாக நிறுத்துகிறார்.

சிக்ளோசுபோரின் என்ற நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்து உறுப்பு மாற்று நோயாளிகளுக்கு பொதுவாக கிடைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் 1982 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 அன்று தோரோத்தி இறந்து போனார். வேற்றுத் திசுவினை ஏற்க மறுக்கும் நோயெதிர்ப்பு தொடர்பான சிக்கல்களால் தோரோத்தி பிசர் இறந்தார் [2]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 RR7819B HEART TRANSPLANTS THE LONGEST SURVIVOR (Television production). AP Television. 8 May 1978. w010124. பார்க்கப்பட்ட நாள் 25 January 2017.
  2. 2.0 2.1 2.2 "Obituary for Dorothy Fischer (1981)". remembered.co.za. பார்க்கப்பட்ட நாள் 19 January 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Dorothy Fischer becomes the first South African woman to undergo a heart transplant". sahistory.org. South African History Online. Archived from the original on 6 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 January 2017.

நூற்தொகை

தொகு
  • Wallis, F. (2000). News Diary: facts and freaks over 1,000 years, Cape Town: Human & Rousseau.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரோத்தி_பிசர்&oldid=3559773" இலிருந்து மீள்விக்கப்பட்டது