தோற்றப்பாடு

தோற்றப்பாடு (Phenomenon) என்பது பொதுவாக ஒரு கவனிக்கத்தக்க, உற்று உணரக்கூடிய சிறப்புபெற்ற நிகழ்வைக் குறிக்கும். நிகழ்வுகளின் அவதானிக்கக் கூடிய அமைவுகள் தோற்றப்பாடுகள் என அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக புவி தன் அச்சில் சுழலுகின்ற புவிச் சுழற்சி காரணமாக இரவு பகல் தோன்றுவது, சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவது என்பன தோற்றப்படுகளாகும்.

அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் நேரடித் தரவுகள் தோற்றப்பாடுகளைப் பற்றியவையே. இவற்றைப் பயன்படுத்தி பல தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. பல்வேறு துறைகளுக்குத் தொடர்புடைய பல தோற்றப்பாடுகளைப் பட்டியலிட முடியும்.

பல்வேறு வகையான தோற்றப்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன. அவற்றிற் சில கீழே:

தத்துவத்தில் தோற்றப்பாடு என்ற சொல் சிறப்புப் பொருள் பெறுகிறது. இம்மானுவேல் கன்ட் என்ற தத்துவவியலாளர் நம்மால் உணரக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கும் தோற்றப்பாடுகளையும் நம்மால் உணர முடியாத நிகழ்வுகளையும் வேறுபடுத்தி ஒரு தத்துவத்தை முன்வைத்தார். தமக்குத் தாமே நிகழ்பவற்றை நம்மால் உணரமுடியாதாகையால் நம் உணர்வின், உறுதலின் பின்புலத்தில் உள்ள நடப்பைப் பற்றி அறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் விளைவாக தோற்றப்பாடியல் என்ற தத்துவவியல் உட்பிரிவு ஒன்று தோன்றியது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தோற்றப்பாடு&oldid=3924112" இலிருந்து மீள்விக்கப்பட்டது