தோலா சென்

இந்திய அரசியல்வாதி

தோலா சென் (பிறப்பு 26 மார்ச் 1967[1]) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தொழிற்சங்கவாதியும் ஆவார். இவர் 2020 முதல் இந்தியத் தேசிய திரிணாமுல் தொழிற்சங்க காங்கிரசின் மத்திய தலைவராக உள்ளார்.[2][3][4]

கல்வி

தொகு

தோலா சென் 1990ஆம் ஆண்டு கொல்கத்தா, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் தெகாரியா, ராஜர்காட்டில் வசிக்கிறார்.[5]

அரசியல்

தொகு

தோலா சென் 2014 இந்திய பொதுத் தேர்தலில் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.[2][3][6]

இவர் மேற்கு வங்கத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][7]

21 செப்டம்பர் 2020 அன்று, தோலா சென் மற்றும் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களும் மாநிலங்களவையில் ஆவணங்களைக் கிழித்து, ஒலிவாங்கிகளை உடைத்து, இருக்கையின் மீது நின்று, மாநிலங்களவையின் துணைத் தலைவரை நோக்கிக் கூச்சலிட்டதன் மூலம் இவர்கள் அத்துமீறி நடந்துகொண்டதற்காக மாநிலங்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களின் செயலுக்குப் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.[8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Dola Sen - Profile". india.gov.in. இந்திய அரசு. Archived from the original on 2016-05-07. பார்க்கப்பட்ட நாள் 2021-04-27.
  2. 2.0 2.1 "MIRIK | INTTUC welcomes Dola Sen as poll candidate". echoofindia.com. The Echo of India. 2014-03-08. Archived from the original on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2021-04-27.
  3. 3.0 3.1 "The Statesman: Supriyo makes it tricky for TMC, Left". thestatesman.net. 2014-05-06. Archived from the original on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2021-04-27.
  4. "Trinamul trade union leader in assault row". 2018-09-03. Archived from the original on 2018-09-03. பார்க்கப்பட்ட நாள் 2021-04-27.
  5. "Dola Sen Asansol (West Bengal)". myneta.info. Archived from the original on 3 August 2014.
  6. "Fourth Phase West Bengal Lok Sabha Poll Tomorrow". ganashakti.com. 2016-03-04. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-04-27.
  7. "Dola Sen files nomination for RS". The Hindu. 8 March 2015. http://www.thehindu.com/news/cities/kolkata/dola-sen-files-nomination-for-rs/article6970411.ece. பார்த்த நாள்: 15 October 2015. 
  8. "Derek O'Brien, 7 other Opposition MPs suspended over Rajya Sabha ruckus on farm bills". Zee News (in ஆங்கிலம்). 2020-09-21. Archived from the original on 3 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-04-27.
  9. "Motion seeking suspension of MPs, who intimidated deputy chair Harivansh, likely in Rajya Sabha tomorrow". BW Businessworld (in ஆங்கிலம்). 20 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-04-27.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோலா_சென்&oldid=3747585" இலிருந்து மீள்விக்கப்பட்டது