தோ பாயோ வைராவிமட காளியம்மன் கோயில்

சிங்கப்பூரிலுள்ள ஓர் அம்மன் கோயில்

வைராவிமட காளியம்மன் கோயில் என்பது சிங்கப்பூர் நாட்டின் தோ பாயோ என்ற நகரில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் காளியம்மன் ஆவார்.

வைராவிமட காளியம்மன் கோயில்
வைராவிமட காளியம்மன் கோயில் is located in சிங்கப்பூர்
வைராவிமட காளியம்மன் கோயில்
வைராவிமட காளியம்மன் கோயில்
வைராவிமட காளியம்மன் கோயில், தோ பாயோ, சிங்கப்பூர்
ஆள்கூறுகள்:1°20′06″N 103°51′33″E / 1.3350°N 103.8591°E / 1.3350; 103.8591
அமைவிடம்
நாடு: சிங்கப்பூர்
அமைவிடம்:தோ பாயோ
ஏற்றம்:7.18 m (24 அடி)
கோயில் தகவல்
மூலவர்:காளியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:வருட பிரம்மோற்சவம், நவக்ஸ்ரீ ஹோமம், கொடியேற்றம், இரத ஊர்வலம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
வரலாறு
கட்டிய நாள்:1860

விபரங்கள்

தொகு

சிங்கப்பூரிலுள்ள இந்து அறக்கட்டளை வாரியம் கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[2] சிங்கப்பூரின் பழைமையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[3] கில்லினி சாலை மற்றும் ஆர்ச்சர்ட் சாலை சந்திப்பில் 1860ஆம் ஆண்டு இக்கோயில் சிறியதாகக் கட்டப்பட்டது. மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்கும் காரணங்களால், 1921ஆம் வருடம் சோமர்செட் சாலையில் இக்கோயில் புனர் பெற்றது. மீண்டும் சில காரணங்களால் இடமாற்றம் செய்யப்பட வேண்டி, தற்போதைய தோ பாயோ பகுதியில், 1982ஆம் ஆண்டு இக்கோயில் மீண்டும் நிறுவப்பட்டது. புனரமைக்கப்பட்ட இக்கோயிலின் கும்பாபிசேகம் 1986ஆம் வருடம் மார்ச்சு மாதம் நடைபெற்றது.

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 7.18 மீ. உயரத்தில், (1°20′06″N 103°51′33″E / 1.3350°N 103.8591°E / 1.3350; 103.8591) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, சிங்கப்பூரில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

 
 
தோ பாயோ வைராவிமட காளியம்மன் கோயில்
தோ பாயோ வைராவிமட காளியம்மன் கோயில் (சிங்கப்பூர்)

திருவிழாக்கள்

தொகு

வருட பிரம்மோற்சவம், நவக்ஸ்ரீ ஹோமம், கொடியேற்றம் மற்றும் இரத ஊர்வலம் ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.

இதர தெய்வங்கள்

தொகு

துர்க்கை, விநாயகர், முருகன், ஐயப்பன், குருவாயூரப்பன், பெரியாச்சி அம்மன், அங்காள பரமேசுவரி மற்றும் மதுரை வீரன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Sivananthan Neelakandan (1 நவம்பர் 2019). சிங்கைத் தமிழ்ச் சமூகம் (Singai Tamil Samugam): வரலாறும் புனைவும். Kalachuvadu Publications Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-89820-68-3.
  2. "இந்து அறக்கட்டளை வாரிய ஆலயங்களில் திருவிழா நாள்களிலும் மற்ற சில நாள்களிலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி". Seithi Mediacorp (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2024.
  3. "சிங்கப்பூர் ஆலயங்கள்: ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயம்". www.tamilmurasu.com.sg. 30 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2024.

வெளி இணைப்புகள்

தொகு