த. இரத்னா பாய்
தடபட்லா ரத்னா பாய் (T. Ratna Bai) என்பவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் மாநிலங்களவைக்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். வரதட்சணை மரணங்கள் முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வரையிலான கவலைகள் அதிகரித்து நிலையி இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து சிறப்பாகச் செயல்படும் உறுப்பினராக உள்ளார்.[1]
த. இரத்னா பாய் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 15 ஏப்ரல் 2008 – 14 ஏப்ரல் 2014 | |
தொகுதி | ஆந்திரப் பிரதேசம் (மாநிலங்களவை) |
சட்டமன்ற உறுப்பினர், ஆந்திரப்பிரதேசம் | |
பதவியில் 1972–1978 | |
முன்னையவர் | சோதி மல்லிகார்ஜூனா |
பின்னவர் | கோரலா பிரகாசு ராவ் |
தொகுதி | ராம்பச்சோதவரம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இரத்னா பாய் தடபாடலா 31 திசம்பர் 1946 ராம்பச்சோதவரம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சத்தியநாராயணா பேதிரெட்டி |
பிள்ளைகள் | அமர் மித்ரா அருண் மித்ரா |
வாழிடம்(s) | 36, மீனா பாக், புது தில்லி, இந்தியா (அலுவல்) 5-42, முதன்மை சாலை, ராம்பச்சோதவரம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா (private) |
தொழில் | அரசியல்வாதி |
இணையத்தளம் | Official website |
மூலம்: Government of India |
இவர் 2005 முதல் 2007 வரை கிரிஜன் கூட்டுறவுக் கழகத்தின்[2] தலைவராகப் பணியாற்றியபோது, கிட்டத்தட்ட வழக்கற்றுப் போனவற்றை[3] செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுப்பதில் முக்கிய பங்காற்றினார்.[4] 4.5 மில்லியன் ஆதிவாசி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், வாட் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்க அனுமதிக்கும்படி, ஆந்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் டாக்டர். எ. சா. ராஜசேகர ரெட்டியை வற்புறுத்துவதில் வெற்றி பெற்றார்.[5] பழங்குடியினர் நலனை இலக்காகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ராம்பச்சோதவரம் ராஜீவ் காந்தி சங்கத்தின் நிறுவனர் தலைவராகவும் உள்ளார்.
1972 முதல் 1978 வரை ராம்பச்சோதவரம் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
வகித்தப் பதவிகள்
தொகு- ஏப்ரல் 2008 மாநிலங்களவை உறுப்பினர்
- ஆகத்து 2008 - மே 2009 உறுப்பினர், ஊரக வளர்ச்சிக் குழு
- ஆகத்து 2008 - மே 2009 மற்றும் செப்டம்பர் 2009 முதல் உறுப்பினர், பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு
- ஆகத்து 2009 முதல் உறுப்பினர், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகம்
- 2010 முதல் உறுப்பினர், கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்
- 1972–78 உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Questions put by Hon' Member of Parliament, Smt. T Ratna Bai". Government of India. பார்க்கப்பட்ட நாள் 16 June 2011.
- ↑ "Board members of the Girijan Co-Operative Corporation". GCC, Visakhapatnam. Archived from the original on 24 August 2007. பார்க்கப்பட்ட நாள் 14 February 2007.
- ↑ "GCC achieves Rs 112-crore sales turnover". பார்க்கப்பட்ட நாள் 27 January 2005.
- ↑ "About Girijan Corporation". Ministry of Tibal Welfare, Andhra Pradesh, இந்தியா. Archived from the original on 28 January 2005. பார்க்கப்பட்ட நாள் 27 April 2005.
- ↑ "GCC hails VAT exemption" இம் மூலத்தில் இருந்து 5 January 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080105125612/http://www.hindu.com/2005/12/18/stories/2005121818590500.htm.