த. உதயச்சந்திரன்

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்
(த. உதயசந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

த. உதயசந்திரன் (ஆங்கில மொழி: T. Udhayachandran) ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலரும், தற்போதைய தமிழக அரசின் தொல்லியல் ஆணையரும்[3][4] ஆவார். 2021ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[5]

த. உதயச்சந்திரன்
பிறப்புஉதயச்சந்திரன்
மே 17, 1972 (1972-05-17) (அகவை 52)[1]
நாமக்கல், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஇந்திய ஆட்சிப்பணி
பெற்றோர்தங்கராஜ்[2]

இளமை

தொகு

உதயசந்திரன் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டத்தில் பிறந்தவர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாலைப்போக்குவரத்துத் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணு, தொடர்பியல் பிரிவில் பொறியியல் பயின்றுள்ளார். இவர் தனது 23ஆம் அகவையில் 1995 இல் இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வெழுதி, இத்தேர்வில் இந்திய அளவில் 38ஆம் இடத்தினைப்பெற்று மிக இளம்வயதிலேயே இந்திய ஆட்சிப்பணியேற்ற அலுவலர் என்ற சிறப்பினைப் பெற்றவர்.[6]

பதவிகள்

தொகு

ஈரோடு, மதுரை மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். மேலும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், தமிழகச் செய்தி மற்றும் மக்கள்தொடர்புத்துறை, எல்நெட் தொழில்நுட்பக்கழகம், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, குன்னூர் தமிழ்நாடு சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் (INDCOSERVE) தலைவர் மற்றும் நிருவாக இயக்குநர்[7] தமிழ் வளர்ச்சித்துறை ஆகிய தமிழ்நாட்டு அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.[8][9] மேலும் ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது மாணவர்களுக்கான கல்விக்கடன் திட்டம் தொடங்க முன்னோடியாக விளங்கினார்.[10] இவருடைய பணிக்காலத்தில் மதுரை மாவட்டத்தில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்ராமங்கலம் ஆகிய பஞ்சாயத்துகளில் பத்து ஆண்டுகளாக உள்ளூர் கலகம் காரணமாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார்.[11] தமிழக அரசின் தகவல் தொழிற்னுட்வியல் துறையின் கீழ் தன்னாட்சி அமைப்பாகச் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.[12] 2021ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[5]

பள்ளிக்கல்வித்துறைப் பணிகள்

தொகு
  • இவர் பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராகப் பணியாற்றிய போது மாணவர்களுக்கு உகந்தவகையில் புதுமையான அணுகுமுறையுடன் பாடத்திட்டத்தினை மாற்றியமைத்தார்.
  • மாணவர்களுக்கு இருந்துவந்த தர மதிப்பீட்டு முறையினை அகற்றினார்.
  • இவர் கல்வித்திட்டத்தில் தகவல் தொழிற்னுட்பம் குறித்த பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இவரின் புதிய அணுகுமுறையால் உருவாக்கப்பட்டுள்ள பாடநூல்களில் விரைவுக்குறியீடுகள் ஒவ்வொருப்பாடத்திற்கும் சேர்க்கப்பட்டுள்ளது தேசிய அளவில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்களிடையே கவனம் பெற்றுள்ளது[13].[14][15]

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையப் பணிகள்

தொகு

இவர் மிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் செயலாளராக இருந்தபோது தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, இணையம் சார் விண்ணப்ப அமைப்பு மற்றும் கணிப்பொறி சார் தேர்வுகள் போன்ற புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தினார். 2011ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக பணியாற்றிய போது, தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களால் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மேற்கொள்வதற்கு இவர் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு எதிராக ஒரு புகார் எழுப்பினார். விழிப்புணர்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குனரக இயக்குநர் டி.என்.பி.எஸ்.சி தலைவர், செல்லமுத்து மற்றும் டி.என்.பி.எஸ்.சி இன் அனைத்து 13 உறுப்பினர்களுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை பதிந்தார். 2012 இல், ஆர். செல்லமுத்து ஆளுநருக்கு தனது இராஜினமாவைச் சமர்ப்பித்தார்.[16][17]

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் தேர்தல்

தொகு

இவர் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தபோது மானுடவியல் அணுகுமுறையைக் கையாண்டு பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய ஊராட்சி மன்றங்களில் பத்து ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஊராட்சிமன்றத் தேர்தல்களை நடத்தி சமூகநீதியை நிலைநாட்டினார்.[18][19][20]

மதுரை சார்ந்தப்பணிகள்

தொகு
  • இவர் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தபோது பெரிய அளவிலான புத்தகக்கண்காட்சியை நடைபெற துணைநின்றார்.
  • மதுரையில் தகவல் தொழிற்னுட்பவியல் பூங்காவினை ஏற்படுத்தினார்.
  • தமிழர்களின் மரபான விளையாட்டுகளில் ஒன்றான சல்லிக்கட்டு மீண்டும் நடைபெற உரிய விதிகளை வகுத்து செயல்படுத்தினார்.[21][22]

கல்வி வளர்ச்சி செயல்பாடுகள்

தொகு
  • இவர் ஈரோடு மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தபோது கல்விக்கடன் வழங்குவதற்கான திருவிழாக்களை நடத்தி குமுக, பொருளியல் நிலைகளில் நலிவுற்ற நிலையில் இருந்த மாணவர்கள் 8,500 பேர் ரூ.110 கோடிகள் கல்விக்கடன் பெற வழிவகை செய்தார்.

மகளிர் மேம்பாட்டுப்பணிகள்

தொகு

இவர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி 2008-2009 ஆகிய இரு ஆண்டுகளில் ஏழை எளிய மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கிகளின் வாயிலாக ரூ.5,000 கோடிகள் பெற்று பொருளியில் மேம்பாட்டுப்பணிகளில் ஈடுபட துணைநின்றுள்ளார்.

ஊரக வளர்ச்சிக்கான செயல்பாடுகள்

தொகு

இவர் ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையாராக இருந்துபோது பல்வேறு வளர்ச்சிப்பணிகளை முன்னெடுத்துள்ளார், குறிப்பாக ஏழை எளியோர் எளியமுறையில் வீடுகட்டும் திட்டங்களை அணுக திட்டங்களை வகுத்துள்ளார்.[23]

தமிழ்நாடு மின்னணுக்கழம் சார்ந்த பணிகள்

தொகு

இவர் தமிழ்நாடு தமிழ்நாடு மின்னணுக்கழத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தபோது தமிழ்நாடு தகவல் தொழிற்னுட்வியல் துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைப் பெற்றதற்கு காரணமாக இருந்துள்ளார். தமிழ்நாடு மின் ஆளுகைத்திட்டங்களின் செயற்பாட்டிற்கு இவர் வகுத்த கருத்தியல் அடித்தளம் குறிப்பிடத்தக்கது.[23]

தமிழ் இணையக்கல்விக்கழகப் பணிகள்

தொகு
  • இவர் தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் இயக்குநராகப் பணியாற்றிய போது அரியநூல்கள், பனையோலைகள், ஆராய்ச்சி இதழ்கள், கையெழுத்துப்படிகள், செப்பேடுகள் என 50 இலட்சத்திற்கும் மேற்பட்டபக்கங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு இணையத்தின் வழி பகிரப்பட துணை நின்றுள்ளார்.
  • நூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கணித்தமிழ்ப்பேரவை செயல்பட வழிவகுத்தார்.
  • பல்வேறு பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் தமிழ் இணையக்கல்விக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு கணித்தமிழ் வளர்ச்சிகுரிய மென்பொருள்களை உருவாக்கிடும் திட்டங்களை உருவாக்கினார்.
  • தமிழ்பெருங்களஞ்சியத்திட்டத்தினை தொடங்கி வேளாண்மை, மீன்வளம் சார்ந்த துறைகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை உருவாக்கிட உறுதுணை செய்தார்.
  • விண்டோஸ் இயக்ககத்தில் தமிழ்99 விசைப்பலகையை அடிப்படையான தமிழ் விசைப்பலகையாக அமைக்க நடவடிக்கை எடுத்தார்.

விருதுகளும் பரிசுகளும்

தொகு
  • ஆனந்த விகடன் இதழ் 2007, 2017, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான முதல் பத்து ஆளுமைகளில் ஒருவர் என்று தெரிவுசெய்து விருதளித்துள்ளது.
  • விகடன் குழுமம் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த 10 மாந்தர்களுக்கான விருதினை இவருக்கு வழங்கியதற்கு, அரசு பொதுத் தேர்வுகளில் தர முறையை ஒழித்தது, மாநில அரசின் கலைத்திட்டத்தில் நவீன காலத்திற்கான மாற்றங்களை உள்ளடக்கி புதிய பாடத்திட்டப்பணிகளில் ஈடுபாடு காட்டியது, நீட் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் தொடக்கம் போன்ற இவரின் பணிகள் குறிப்பிடத்தக்கவை என விகடன் சுட்டிக்காட்டியுள்ளது.[24]
  • இந்திய அரசு மின் ஆளுகைக்கான விருதை மின்னணு தேயிலை ஒப்பந்தப்புள்ளி அமைப்பிற்காக 2004இல் வழங்கியது.
  • ஜேசீஸ் பன்னாடு அமைப்பு சிறந்த பத்து இந்தியர்களில் ஒருவர் என்னும் விருதினை 2007 இல் இவருக்கு வழங்கியது.
  • விஜய் தொலைக்காட்சி சிறந்த மக்கள் பணி ஆற்றியவர் என்பதற்கான விருதினை 2012இல் வழங்கியுள்ளது.

பொழுதுபோக்கும் ஆர்வமும்

தொகு
  • புத்தகங்களை தேடித்தேடி படிப்பதில் இவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ் இலக்கியம், தற்கால வரலாறு, மானுடவியல், தொழிற்னுட்பங்கள் என இவர் தேர்ந்தெடுத்து படிக்கின்றார்.
  • இவர் ஒரு சொற்பொழிவாளர். தமிழ் இதழ்களில் தொடர்ந்து பங்களித்து வருகின்றார்.[23]

சான்றுகள்

தொகு
  1. "Civil List Age calculated as on 01/01/2018". easy.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 December 2018.
  2. "உதயச்சந்திரனின் தந்தை காலமானார்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2020/nov/12/udhayachandran-father-passed-away-3503253.html. பார்த்த நாள்: 13 November 2020. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-08-30. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  4. https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/school-education-secretary-udayachandran-transferred[தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 "முதல்வரின் செயலாளர்களாக 4 பேர் நியமனம்; முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன்!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  6. "T Udhayachandran". FETNA இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304124725/http://www.fetna2015.org/udhayachandran/. பார்த்த நாள்: 25 August 2015. 
  7. "Major reshuffle of IAS officers". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/major-reshuffle-of-ias-officers/article4860826.ece. பார்த்த நாள்: 25 August 2015. 
  8. "Board of directors". TNPL. பார்க்கப்பட்ட நாள் 25 August 2015.
  9. "Board of Directors". textbookcorp.tn.in. Archived from the original on 12 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 25 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Students turn out in large numbers for education loan mela". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/students-turn-out-in-large-numbers-for-education-loan-mela/article1907227.ece. பார்த்த நாள்: 25 August 2015. 
  11. "For the first time in 10 years, caste Hindus participate actively in the poll process in the four "rebel" villages.". frontline.in. http://www.frontline.in/static/html/fl2321/stories/20061103003813200.htm. பார்த்த நாள்: 25 August 2015. 
  12. http://www.tamilvu.org/coresite/html/cwchairmanen.htm
  13. https://www.youtube.com/watch?v=ccmijUBwOPI
  14. https://www.youtube.com/watch?v=r5xODfh-n7U
  15. https://www.youtube.com/watch?v=6jvUI8yPAz4
  16. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tnpsc-secretary-shifted/article4024363.ece
  17. https://www.adrasaka.com/2012/11/blog-post_1148.html
  18. https://frontline.thehindu.com/static/html/fl2321/stories/20061103003813200.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  19. https://www.indiatoday.in/magazine/states/story/20070101-tamil-nadu-dalits-presidents-continue-to-hold-office-today-and-stood-for-elections2007-749205-2007-01-01
  20. http://news.outlookindia.com/items.aspx?artid=424823
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-13. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  22. https://books.google.co.in/books?id=NBBeDwAAQBAJ&pg=PT74&lpg=PT74&dq=ஜல்லிக்கட்டு+போரட்டம்,+கிழக்குப்+பதிப்பகம்=bl&ots=UwW3Lsk6kv&sig=ACfU3U1zjQTj1u9L34a8QMJc1Lb5eelEpw&hl=en&sa=X&ved=2ahUKEwj5yNq9wv7fAhXKWisKHRhGDgIQ6AEwCHoECAYQAQ#v=onepage&q=ஜல்லிக்கட்டு போரட்டம்%2C கிழக்குப் பதிப்பகம்&f=false
  23. 23.0 23.1 23.2 https://web.archive.org/web/20160304124725/http://www.fetna2015.org/udhayachandran/
  24. https://www.vikatan.com/anandavikatan/2018-jan-03/2017-special/137313-2017-top-10-personalities.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._உதயச்சந்திரன்&oldid=4165520" இலிருந்து மீள்விக்கப்பட்டது