த. ரெ. தமிழ்மணி


த.ரெ.தமிழ்மணி கவிதை, கட்டுரை, சிறுகதை, வேர்ச்சொல் ஆய்வு எனப் பன்முகத்தன்மை வாய்த்த படைப்பாளர். மாந்தநேயச் செயல்பாடுகளிலும் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபாடு உடையவர். இவரது படைப்பாளுமை குறித்து உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், " தமிழ் மணி... தமிழ் தனி!" எனப் பாராட்டியுள்ளார். பத்திற்கும் மேற்பட்ட கவிதை நூல்களையும், ஆறு கட்டுரை நூல்களையும், எழுதியுள்ளார். இவையன்றி அழகின் சிரிப்பு, தமிழியக்கம், அயற்சொல் அகரமுதலி, மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும், உலகம் பரவிய தமிழ், வெண்மணிச்சூழல், சாதி ஒழிய சாதி, பிழம்பு, கவிஞர்களும் களங்களும் ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். கனவுக்குள் வருவாயா என்ற தலைப்பில் பூண்டி கல்லூரி மாணவர்களில் கவிதைகள் தொகுப்புநூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தமிழ்நிலா, நேசச் சாரல், அனிச்சம்,, மாணவன் உள்ளிட்ட சிற்றிதழ்களை நடத்தியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு

1.மாதவம் இதழ் நேர்காணல் 2. அறிவுமதி கவிதைகள் ஓர் ஆய்வு கௌரா பதிப்பகம் 3. தமிழில் சூழல் கவிதைகள் -அ. சண்முகானந்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ரெ._தமிழ்மணி&oldid=3206254" இலிருந்து மீள்விக்கப்பட்டது