த கிரீன் மைல் (திரைப்படம்)

த கிரீன் மைல் (The Green Mile) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஃபிராங் டாராபொண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டொம் ஹாங்ஸ்,மைக்கேல் கிளார்க் டங்கன்,டேவிட் மோர்ஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

த கிரீன் மைல்
இயக்கம்ஃபிராங் டாராபொண்ட்
தயாரிப்புடேவிட் வால்டெஸ்
ஃபிராங் டாராபொண்ட்
கதைஸ்டீபன் கிங்(நாவல்)
ஃபிராங் டாராபொண்ட்(திரைக்கதை)
இசைதோமஸ் நியூமன்
ஜெஃப் கூப்வுட்
நடிப்புடொம் ஹங்ஸ்
டேவிட் மோர்ஸ்
போனி ஹண்ட்
மைக்கல் கிலார்க் டன்கன்
ஒளிப்பதிவுடேவிட் டாட்டெர்சால்
படத்தொகுப்புரிச்சர்ட் பிரான்சிஸ் புரூஸ்
வெளியீடு1999
ஓட்டம்188 நிமிடங்கள்.
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

மர்மப்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

டாம் ஹாங் ஒரு சிறைச்சாலையில் மரண தண்டனைக் கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் பகுதியில் ஒரு அதிகாரியாகப் பணிபுரிகின்றார். இவ்வேளையில் இங்கு ஒரு பெரிய உருவமுடைய கறுப்பின இளைஞர் ஒருவர் மரண தண்டனை நிறைவேற்றப்படக் கொண்டுவரப்படுகின்றார். இந்த இளைஞன் மீது இரு வெள்ளையினச் சிறுமிகளைக் கற்பழத்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.

தண்டனை நிறைவேற்ற சில நாட்களுக்கு முன்பாகவே இந்த இளைஞனிடம் சில தெய்வ சக்திகள் இருப்பதை டாம் ஹாங்கும் அவரின் நண்பர்களும் கண்டுகொள்கின்றனர். இவர் மூலம் பலரும் பல்வேறு வழியில் பயனடைகின்றனர். இறுதியில் உண்மையான குற்றவாளி அதே சிறைக் கூடத்தில் உள்ள வேறொருவன் என்பதை இந்த இளைஞன் மூலம் டாம் ஹாங் அறிந்து கொள்கின்றார்.

ஆயினும் கடமையிலிருந்து மீற முடியாமலும், இளைஞனின் வேண்டுகோளுக்கு இணங்கவும் மரண தண்டனை மின்சாரக் கதிரையில் நிறைவேற்றப்படுகின்றது.

இளைஞன் மூலம் டாம் ஹாங்கின் வாழ்க்கைக் காலம் அநாயாசமாக அதிகரித்து விடுகின்றது. அவர் மரணத்தை விரும்பிய போதும் அதை அடைய முடியாமல் அவதிப்படுவதைக் காட்டுவதுடன் இந்தத் திரைப்படம் நிறைவேறுகின்றது.

துணுக்குகள்

தொகு
IMDB டாப் 250-ல் 136-வது இடத்தையும், 4 ஆஸ்கார் அவார்ட்ஸ் –க்கும்(சிறந்த நடிகர்,சிறந்த படம்,சிறந்த                                   சவுன்ட்,சிறந்த திரைக்கதை )    பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Stephen King எழுதிய “ The Green Mile-1996”
என்ற சீரியல் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

வெளியிணைப்புகள்

தொகு