ஸ்டீபன் கிங்

இசுடீபன் எட்வின் கிங் (Stephen Edwin King)(பிறப்பு. செப்டம்பர் 21,1947) திகில், குற்றப்புனைவு, அறிவியல் புனைவு, கனவுருப்புனைவு மற்றும் மர்மப் புனைவு உள்ளிட்ட பிற வகைகளையும் எழுதும் சமகாலத்திய எழுத்தாளர் ஆவார்.[2] இவர் திகில் கதைகளின் மன்னர் என அறியப்படுகிறார்.[3] முதன்மையாக தனது புதினங்களுக்காக அறியப்பட்டாலும், இவர் சுமார் 200 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.[4] திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் பல ஊடகங்களிலும் இவரது கதைகள் தழுவப்பட்டுள்ளது.

இடீபன் கிங்
2024 இல் கிங்
2024 இல் கிங்
பிறப்புஇசுடீபன் எட்வின் கிங்
செப்டம்பர் 21, 1947 (1947-09-21) (அகவை 77)
போர்ட்லாந்து, மைனே, அமெரிக்கா
புனைபெயர்
  • இரிச்சர்ட் பெக்மான்
  • ஜான் சுவித்தென்
  • பெரில் இவான்ஸ்
தொழில்எழுத்தாளர்
கல்வி நிலையம்மனே பல்கலைக்கழகம் (இளங்கலை)
காலம்1967–தற்போது வரை[1]
வகை
துணைவர்
தபிதா இசுப்ரூஸ் (தி. 1971)
பிள்ளைகள்3 பேர்
கையொப்பம்
இணையதளம்
stephenking.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

இவர் இரிச்சர்ட் பக்மேன் என்ற புனைப்பெயரிலும் கதைகளை வெளியிட்டுள்ளார். மேலும் பிற எழுத்தாளர்களுடன் இணைந்தும் எழுதியுள்ளார். இவர் புனைகதை அல்லாதவற்றையும் எழுதியுள்ளார்.

தனது படைப்புகளுக்காக ஓ. ஹென்றி விருதையும், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் புத்தக பரிசையும் வென்றுள்ளார். அமெரிக்க எழுத்துக்களுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக 2003 ஆம் ஆண்டு சர்வதேசப் புத்தக நிறுவனம் தனது புகழ்பெற்ற விருதை வழங்கியது. 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மர்ம எழுத்தாளர்களிடமிருந்து கிராண்ட் மாஸ்டர் விருது மற்றும் 2014 தேசிய கலைப் பதக்கம் உள்ளிட்ட இலக்கியத்திற்கான ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்காக கௌரவங்களை வென்றுள்ளார்.[5][6][7] [8]

வாழ்க்கை

தொகு

இசுடீபன் கிங் 1947 செப்டம்பர் 21 அன்று மைனேவின் போர்ட்லேண்டில் டொனால்ட் எட்வின் கிங் மற்றும் நெல்லி ரூத் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[9] [10] [11]

இவருடைய தந்தை இவரது இரண்டாவது வயதில் குடும்பத்தை விட்டு வெளியேறினார். இவரது குடும்பம் பல நேரங்களில் பெரும் நிதி நெருக்கடியில் இருந்தனர். இவர்கள் தங்கள்உறவினர்களை நம்பியிருந்தனர்.[12] கிங்கிற்கு 11 வயது ஆனபோது, குடும்பம் மைனேவின் டர்ஹாமுக்கு குடிபெயர்ந்தது. அங்கு இவரது தாயார்மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு இல்லத்தில் பராமரிப்பாளராக ஆனார்.

1966 ஆம் ஆண்டில், கிங் ஓரானோவில் உள்ள மைனே பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையுடன் சேர்ந்தார். அங்கு ஆங்கிலம் பயின்றார். அங்கு, தி மைனே கேம்பஸ் என்ற மாணவர் செய்தித் தாளுக்கு எழுதினார். மேலும் பேராசிரியர்களான எட்வர்ட் ஹோம்ஸ் மற்றும் பர்டன் ஹாட்லன் ஆகியோர் இவருக்கு வழிகாட்டினர்.[13][14][15] ஹாட்லன் ஏற்பாடு செய்த ஒரு எழுத்து பட்டறையில் கிங் பங்கேற்றார், அங்கு தபிதா இசுப்ரூஸைக் காதலித்தார்.[16] கிங் 1970 இல் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார், அதே ஆண்டு இவரது மகள் நவோமி ரேச்சல் பிறந்தார். கிங் மற்றும் இசுப்ரூஸ் 1971 இல் திருமணம் செய்து கொண்டனர்.[17]

திடுக்கிடச் செய்யும் மர்மக் கதையான , த கிளாஸ் ஃப்லோர் என்ற தனது முதல் கதையை 1967 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.[18] மைனே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, உடனடியாக வேலை கிடைக்காகத காரணத்தால் காவலீர் போன்ற பத்திரிகைகளுக்கு சிறுகதைகளை எழுதினார். 1971 ஆம் ஆண்டில், மைனேவின் ஹாம்ப்டனில் உள்ள ஹாம்ப்டன் அகாதமியில் ஆங்கில ஆசிரியராக கிங் பணியமர்த்தப்பட்டார்.[18] தொடர்ந்து பத்திரிகைகளுக்கு சிறுகதைகளை பங்களித்தார்.[19]

விபத்தும் அதன் பின்விளைவுகளும்

தொகு

ஜூன் 19,1999 அன்று, இசுடீபன் கிங் ஒரு வாகன விபத்த்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.[20][21] இந்த விபத்தில் நுரையீரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு வருடங்கள் கழித்து கிங் கடுமையான நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டார். தனக்கு ஏற்பட்ட காயங்கள் காரணத்தால் நீண்ட நேரம் அமர்ந்து எழுத முடியாத காரணத்தால் தன்னால் தொடர்ந்து எழுத முடியாது என 2002 ஆம் ஆண்டு முதல் கதைகள் எழுதுவதை நிறுத்தப் போவதாக கிங் அறிவித்தார். ஆனாலும் தனது மனைவியின் துணையுடன் பல கதைகளை எழுதி வெளியிட்டு வருகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. King, Tabitha; DeFilippo, Marsha. "The Author". stephenking.com.
  2. Breznican, Anthony (September 3, 2019)."Life Is Imitating Stephen King's Art, and That Scares Him" பரணிடப்பட்டது செப்டெம்பர் 3, 2019 at the வந்தவழி இயந்திரம். த நியூயார்க் டைம்ஸ். Retrieved September 3, 2019.
  3. K.S.C. (September 7, 2017). "Why Stephen King's novels still resonate". தி எக்கனாமிஸ்ட் இம் மூலத்தில் இருந்து September 9, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170909015350/https://www.economist.com/blogs/prospero/2017/09/subverting-american-dream. 
  4. Jackson, Dan (February 18, 2016). "A Beginner's Guide to Stephen King Books" பரணிடப்பட்டது பெப்பிரவரி 7, 2019 at the வந்தவழி இயந்திரம். Thrillist. Retrieved February 5, 2019.
  5. "Distinguished Contribution to American Letters". National Book Foundation. 2003. Archived from the original on March 10, 2011. பார்க்கப்பட்ட நாள் March 11, 2011.
  6. "FORUMS du CLUB STEPHEN KING (CSK)". Forum Stephen King. Archived from the original on February 22, 2012. பார்க்கப்பட்ட நாள் March 8, 2012.
  7. "Stephen King". www.arts.gov.
  8. Joyce Carol Oates (2016). "Joyce Carol Oates on Stephen King". celestialtimepiece.com.
  9. "In Search of our Fathers". Finding Your Roots. பொது ஒளிபரப்புச் சேவை. September 23, 2014. No. 1, season 2.
  10. King, Stephen (2000). On writing: a memoir of the craft. New York: Scribner. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0684853529.
  11. Rogak, Lisa (January 5, 2010). Haunted Heart: The Life and Times of Stephen King. St. Martin's Publishing Group. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4299-8797-4. Archived from the original on November 4, 2021. பார்க்கப்பட்ட நாள் December 22, 2019.
  12. Rogak, Lisa (January 5, 2010). Haunted Heart: The Life and Times of Stephen King. St. Martin's Publishing Group. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4299-8797-4. Archived from the original on November 4, 2021. பார்க்கப்பட்ட நாள் December 22, 2019.
  13. "Edward M. Holmes". Bangor Daily News. July 25, 2010. https://www.bangordailynews.com/2010/07/25/obituaries/edward-m-holmes/. 
  14. Anstead, Alicia (January 23, 2008). "UM scholar Hatlen, mentor to Stephen King, dies at 71". Bangor Daily News. https://archive.bdnblogs.com/2008/01/23/um-scholar-hatlen-mentor-to-stephen-king-dies-at-71/. ""Not only did he hone his writing under Hatlen’s careful eye, but during the workshop he and Spruce fell in love and eventually married."" 
  15. Mark Singer (September 7, 1998). "What Are You Afraid Of?". The New Yorker.
  16. . 
  17. King, Tabitha; DeFilippo, Marsha. "The Author". stephenking.com.
  18. 18.0 18.1 King, Tabitha; DeFilippo, Marsha. "The Author". stephenking.com.King, Tabitha; DeFilippo, Marsha. "The Author". stephenking.com.
  19. Blue, Tyson (1989). The Unseen King. Borgo Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55742-073-4.
  20. King, Stephen (2000). On Writing: A Memoir. London: Hodder & Stoughton. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-76996-3.
  21. "King's accident". Lijia's Library. Archived from the original on March 7, 2005. பார்க்கப்பட்ட நாள் December 3, 2014.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீபன்_கிங்&oldid=4170708" இலிருந்து மீள்விக்கப்பட்டது