ஷார்டு

(த சார்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தி ஷார்டு (The Shard, முன்னதாக ஷார்டு இலண்டன் பிரிட்ஜ், இலண்டன் பாலம் கோபுரம்[2][3] அல்லது கண்ணாடிச் சில்லு)[4][5] ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் உள்ள ஓர் வானளாவி ஆகும். தரைமட்டத்திற்கு மேலே 309.6 மீட்டர்கள் (1,016 அடி) உயரமுடைய இது சூலை 2012இல் கட்டி முடிக்கப்பட்டது. [6] இதுவே ஐரோப்பாவிலுள்ள மிக உயரமான கட்டிடங்களில் முதல்நிலையில் உள்ளதாகும். ஐக்கிய இராச்சியத்தில் மிக உயரமான கட்டுமானமாக இரண்டாம்நிலையில் உள்ளது; முதலாவதாக 330-மீட்டர் (1,083 அடி) உயரமுடைய எம்லி மூர் ஒலிபரப்புக் கோபுரம் விளங்குகிறது.

தி ஷார்டு
மே 2012இல் தி ஷார்டு
Map
பதிவு உயரம்
Tallest in ஐரோப்பா since 2012[I]
முந்தியதுகொமர்சுபாங்க் கோபுரம்
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமை (உள்ளக அலங்கார வேலைகள் நடைபெறுகின்றன)
இடம்32 இலண்டன் பிரிட்ஜ் சாலை, சௌத்வாக், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
கட்டுமான ஆரம்பம்மார்ச்சு 2009
நிறைவுற்றதுசூலை 2012 (திறப்பு பெப்ரவரி 2013)
செலவு~ £450 மில்லியன்
உயரம்
அலைக்கம்ப கோபுரம்309.6 m (1,016 அடி)
கூரை304.1 m (998 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை95 (இயந்திரங்களுடைத் தளங்கள் உட்பட), 72 (வசிக்கத்தக்கன)
தளப்பரப்பு1,200,000 sq ft (110,000 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ரென்சோ பியானோ
மேம்பாட்டாளர்செல்லர் பிராபர்ட்டி குழுமம்
அமைப்புப் பொறியாளர்டர்னர் & டவுன்சென்டு (திட்ட மேலாண்மை), டபுள்யூஎஸ்பி கன்டர் செய்நுக் (அமைப்புப் பொறியாளர்கள்), இராபர்டு பேர்டு குழுமம் (கான்கிரீத்து வேலைகள்) இசெபெக் டைட்டன் 40+ தளங்களிலும் காங்கிரீத்தும்
சேவைகள் பொறியாளர்அரூப்
முதன்மை ஒப்பந்தகாரர்மேசு நிறுவனம்
மேற்கோள்கள்
[1]

1975ஆம் ஆண்டில் சௌத்வாக்கில் கட்டப்பட்டிருந்த 24 தளக் கட்டிடம்,சௌத்வாக் கோபுரத்தை இடித்து அங்கு இது கட்டப்பட்டுள்ளது. இதனை கட்டிடக் கலைஞர் ரென்சோ பியானோ திட்டமிட்டு வடிவமைத்துள்ளார். இந்தக் கட்டிடத்தில் 72 தளங்கள் வசிக்கத்தக்கன; 245 மீட்டர்கள் (804 அடி) உயரத்திலுள்ள 72வது தளத்தில் பார்வையாளர் அரங்கமும் திறந்தவெளி அவதானிப்பு மேல்தட்டும் உள்ளன.[7] கீழிருந்து மேல்வரை ஓர் ஒழுங்கற்ற பிரமிடு வடிவத்தில் முழுமையும் கண்ணாடியால் போர்த்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இக்கட்டிடம் சில்லு எனப்பொருள்பட ஷார்டு எனப் பெயரிடப்பட்டது. இந்தக் கட்டிடம் சூலை 5, 2012 அன்று திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு பெப்ரவரி, 2013இல் திறந்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.[8][9]

மேற்கோள்களும் குறிப்புக்களும்

தொகு
  1. ஷார்டு at Emporis
  2. "London Bridge Tower, London". Designbuild-network.com. 2011-06-15. பார்க்கப்பட்ட நாள் 2012-07-06.
  3. "Shard funding crisis: Tower finances cast shadow over project". World Architecture News. 10 September 2007 இம் மூலத்தில் இருந்து 29 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120329042927/http://www.worldarchitecturenews.com/index.php?fuseaction=wanappln.projectview&upload_id=1387. பார்த்த நாள்: 7 July 2010. 
  4. Bar-Hillel, Mira (24 February 2009). "£28bn Shard of Glass to start its ascent". London Evening Standard இம் மூலத்தில் இருந்து 27 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100527082453/http://www.thisislondon.co.uk/standard/article-23651085-28bn-shard-of-glass-to-start-its-ascent.do. பார்த்த நாள்: 7 July 2010. 
  5. "Work starts on Shard of Glass". New Civil Engineer. 2 April 2009. http://www.nce.co.uk/news/structures/work-starts-on-shard-of-glass/1996445.article. பார்த்த நாள்: 7 July 2010. 
  6. "Shard London Bridge". SkyscraperNews.com. Archived from the original on 13 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 2 April 2012.
  7. Whitten, Nick (2009-05-20). ""Shard observation deck to be Europe's highest"". Cnplus.co.uk. Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் 2012-07-06.
  8. ""Prince Andrew and Qatari prime minister to open Shard on 5 July"". London-se1.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2012-07-06.
  9. ""Qatar's Shard the tallest building in Europe now"". Gulf-times.com. 2012-01-03. பார்க்கப்பட்ட நாள் 2012-07-06.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shard London Bridge
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷார்டு&oldid=3793065" இலிருந்து மீள்விக்கப்பட்டது