த நேக்குடு பிரே
த நேக்குடு பிரே (The Naked Prey) என்பது 1965ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க சாகசத் திரைப்படமாகும்.[2] கார்னல் வைல்ட் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்து, இயக்கி மற்றும் நடித்திருந்தார். தென்னாப்பிரிக்க நிலங்களில் நடைபெறுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது. காட்டு விலங்கு வழிகாட்டி ஒருவர் கடுமையான நிலப்பகுதிகளில் எவ்வாறு தப்பிப் பிழைக்கிறார் என்பதை இப்படம் காட்டி இருந்தது. அமெரிக்க நாடுகாண் பயணியான ஜான் கோல்ட்டரின் அனுபவங்களை பகுதியளவுக்கு அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் திரைக்கதையானது அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
த நேக்குடு பிரே | |
---|---|
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூன் 3, 1965(சான் செபஸ்டியன் திரைப்பட விழா) மார்ச்சு 23, 1966 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 1:36 மணி நேரம்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உசாத்துணை
தொகு- ↑ "The Naked Prey (12)". British Board of Film Classification. October 19, 2015. பார்க்கப்பட்ட நாள் February 16, 2020.
- ↑ Stafford, Jeff. "The Naked Prey". Turner Classic Movies. Turner Entertainment Networks. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.