த பர்ஸ்ட் பிப்டீன் லைப்ஸ் ஆப் ஹாரி ஆகஸ்ட்

த பர்ஸ்ட் பிப்டீன் லிவ்ஸ் ஆப் ஹேரி ஆகஸ்ட் (The First Fifteen Lives of Harry August) என்பது கேதரீன் வெப் என்னும் பிரித்தானிய எழுத்தாளர் க்ளேர் நார்த் எனும் புனைப்பெயரில் எழுதிய ஒரு புதினமாகும். இந்த புதினம் ஏப்ரல் 2014 இல் பதிப்பிக்கப்பட்டது. இந்த புதினம் சிறந்த அறிவியல் புனைகதை புதினத்திற்கான   ஜான் டபிள்யூ காம்பெல் மெமோரியல் விருதை பெற்றது,[1] சிறந்த அறிவியல் புனைகதைக்கான விருதான ஆர்தர் சி. கிளார்க் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[2]

த பர்ஸ்ட் பிப்டீன் லிவ்ஸ் ஆப் ஹேரி ஆகஸ்ட்
நூலாசிரியர்கேதரீன் வெப்
அட்டைப்பட ஓவியர்சோஃபி பர்டஸ் (படம்)
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
வகைஅறிவியல் புனைவு / கற்பனைக் கதை
வெளியீட்டாளர்ஆர்பிட் புக்ஸ் (ஐ.இ)
ரெட்ஹூப் புக்ஸ் (ஐ.அ)
வெளியிடப்பட்ட நாள்
8 ஏப்ரல் 2014
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்416 (UK), 405 (US)
விருதுகள்சிறந்த அறிவியல் புனைகதை புதினத்திற்கான   ஜான் டபிள்யூ காம்பெல் மெமோரியல் விருது
ISBN0-356-50257-0

கதைச்சுருக்கம்

தொகு

ஹாரி ஆகஸ்ட் 1919 இல் பெர்விக் அபான் ட்வீட் ரயில் நிலையத்தின் பெண்களின் கழிவறையில் பிறந்தான். ஒரு சராசரியான மனிதனாக வாழ்ந்து முடித்த பின் 1989 இல் மருத்துவமனையில் இறந்தான். பின் பிந்தைய வாழ்வின் நினைவுகளுடன் மறுபடியும் 1919 இல் அதே இடத்தில் பிறக்கும் ஹாரி ஆகஸ்ட் இது ஒரு முடிவில்லா காலச்சக்கரம் என்பதை உணர்கிறான். தன்னைப் போல வேறு யாரும் உலகில் உண்டா எனத் தேடி அலைகிறான்.

வரவேற்பு

தொகு

இந்த நாவல் புதுமையான கதைக்களதிற்காக சிறந்த வரவேற்பை பெற்றது.

  1. The John W. Campbell Award பரணிடப்பட்டது 2012-12-29 at the வந்தவழி இயந்திரம் Retrieved 2016-03-02.
  2. sfadb: Arthur C. Clarke Award 2015 Retrieved 2016-03.04.