நகம்
மாந்தர்களின் புறங்கை, புறங்கால் பக்கத்தில் விரல்களின் நுனிப்பகுதியில் கெட்டியாக சற்று வளைந்த தகடு போல் உள்ள பகுதி. இது நாளும் வளர்ந்துகொண்டிருக்கும் நகமியம் அல்லது கெரட்டின் என்னும் ஒரு புரதப்பொருளால் ஆன பகுதி. இது மாந்தர்களைத் தவிர, குரங்கு முதலான பிற முதனிகள் பலவற்றிலும், யானை முதலான பாலூட்டிகள் பலவற்றிலும் விரல்களில் காணப்படுவது. சில விலங்குகளில் இது உகிர் எனவும் கூறப்படும்.