நகரப் பல்கலைக்கழக சோதனை

நகரப் பல்கலைக்கழக சோதனை (டி. சி. யூ. சோதனை[1] அல்லது சி. யூ. சோதனை [2](City University test) என்றும் அழைக்கப்படுகிறது) என்பது நிறக்குருட்டினை கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு வண்ண பார்வை சோதனை ஆகும். பொதுவாகப் பயன்படுத்தப்படும் இசிகாரா சோதனையானது சிவப்பு-பச்சை பிறவி நிற குருட்டுத்தன்மையைக் கண்டறியப் பயன்படுகிறது. ஆனால் இதன் பயன்பாட்டில் பெறப்பட்ட வண்ணப் பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன.[3]

விளக்கம் தொகு

நகரப் பல்கலைக்கழகச் சோதனையில் அனைத்து வகையான வண்ண பார்வை குறைபாடுகளையும் கண்டறியத் தட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.[4] டி. சி. யூ. சோதனையில் பார்ன்சுவொர்த் டி15 வண்ண ஒழுங்கமைப்பு சோதனையிலிருந்து பெறப்பட்டது.[2] இந்த சோதனை 10 தகடுகளைக் கொண்டுள்ளது. இதில் வெவ்வேறு வண்ணங்களில் நான்கு புறப் புள்ளிகளால் சூழப்பட்ட ஒரு மைய வண்ணப் புள்ளி உள்ளது. மையச் சாயலுக்கு மிக நெருக்கமான புள்ளியைத் தேர்ந்தெடுக்கச் சோதனைக்கு உட்படுபவரைக் கேட்கவேண்டும். நான்கு புற புள்ளிகளில், மூன்று புற நிறங்கள் புரோட்டான், டியூட்ரான் மற்றும் டிரைட்டான் குறைபாடு ஆகியவற்றில் உள்ள மைய நிறத்துடன் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.[5] நான்காவது நிறம் டி-15 வரிசையில்[2] அருகில் இருக்கும் வண்ணம் மற்றும் இது மைய நிறத்தைப் போலவே இருக்கும்.

செயல்முறை தொகு

நன்கு ஒளிரூட்டப்பட்ட அறையில், சோதனை தகடுகள் நோயாளியிடமிருந்து சுமார் 35 செ.மீ. தூரத்தில் வைக்கப்பட்டிருக்கும். சோதனைத் தகடுகளைக் காட்டி, எந்தப் புள்ளி மையப் புள்ளிக்கு ஒத்ததாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடும்படி நோயாளியிடம் கேட்கப்படும். ஒவ்வொரு பக்கத்திற்கும் சுமார் 3 வினாடிகள் தரப்படும். மதிப்பெண் தாளில் குறிப்பிடப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் நிறக் குறைபாட்டினைக் கண்டறிய முடியும்.[6]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Birch, J. (November 1997). "Clinical use of the City University Test (2nd Edition)". Ophthalmic & Physiological Optics: The Journal of the British College of Ophthalmic Opticians (Optometrists) 17 (6): 466–472. doi:10.1111/j.1475-1313.1997.tb00084.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0275-5408. பப்மெட்:9666919. https://pubmed.ncbi.nlm.nih.gov/9666919/. 
  2. 2.0 2.1 2.2 Sandip; William. Investigative techniques and ocular examination. பக். 20–21. Sandip, Doshi; William, Harvey. Investigative techniques and ocular examination. Butterworth-Heinemann. pp. 20–21.
  3. Matthew P, Simunovic; MB, BChir. Acquired color vision deficiency. http://www.colorvisiontesting.com/wp-content/themes/colorvisiontesting/pdf/Acquired-Color-Vision-Deficiencies-Simunovic.pdf. 
  4. Hardy, LeGrand H.; Rand, Gertrude; Rittler, M. Catherine (April 1945). "Tests for the Detection and Analysis of Color-Blindness. I. The Ishihara Test: An Evaluation" (in EN). JOSA 35 (4): 268–275. doi:10.1364/JOSA.35.000268. Bibcode: 1945JOSA...35..268H. https://www.osapublishing.org/josa/abstract.cfm?uri=josa-35-4-268. 
  5. Monika Formankiewicz. "Assessment of colour vision" (PDF).
  6. David B., Elliott (2007). "Assessment of Visual Function". Clinical procedures in primary eye care (3rd ). Edinburgh: Elsevier/Butterworth Heinemann. பக். 72–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7020-3924-9. இணையக் கணினி நூலக மையம்:324998045. https://www.worldcat.org/oclc/324998045. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரப்_பல்கலைக்கழக_சோதனை&oldid=3777369" இலிருந்து மீள்விக்கப்பட்டது