நகர மணமகள்
நகர வது அல்லது நகர மணமகள் (Nagarvadhu or Nagar Vadhu) (தேவநாகரி: नगरवधू) பண்டைய இந்தியாவிலும், மத்தியகால இந்தியாவிலும் பாரம்பரியமாக பின்பற்றப்படும் முறையாகும். [1]ஆடல், பாடல் மற்றும் இசை போன்ற கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்ற அழகிய இளம் பெண்கள் அரசவைகளிலும்; அரசவை பிரமுகர்கள் மற்றும் தனவணிகர்களின் மாளிகைகளிலிலும் பெரிதும் போற்றப்பட்டனர்.[2] நகர்வது பட்டத்தை வெல்வதற்காக பெண்கள் போட்டியிட்டனர். இந்த நடைமுறைக்கு எதிராக எந்த தடையும் இல்லை. [3] பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, ஒடிசி, கதகளி, சத்ரியா, மணிப்புரி போன்ற பல்வேறு பாரம்பரிய நடனங்களில் மிகவும் திறமையான அழகான பெண் நகர வதுவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு நகர வது பெண் சமுதாயத்தில் மிகவும் மதிக்கப்பட்டார். மேலும் அப்பெண் கோயில், அரசவை, திருவிழா போன்ற இடங்களில் நடனமாடுவதையும், பாடுவதையும் அரசவையினர் மற்றும் மக்களும் பார்த்து ரசிக்கலாம்.[2]
ஒரு நகர வாதுவின் ஒரு இரவு நடனத்திற்கான விலை மிக அதிகமாக இருந்தது. மேலும் அவள் மிகவும் பணக்காரர்களான அரசர், இளவரசர்கள் மற்றும் பிரபுகளுக்கு மட்டுமே அணுகக்கூடியதாக இருந்தது.
நகர வது அல்லது நகர மணமகள் ஆண்கள் எவரையும் திருமணம் செய்து கொள்வதில்லை. ஆனால் வசதிபடைத்த ஆண்களிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டு, அவர்களின் பாலியல் இச்சைகளை தீர்ப்பதுடன், ஆடியும், பாடியும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வர். இப்பெண்கள் கடவுளையே கணவராக கொண்டவர்கள் என்பதால் இவர்களை நித்திய கல்யாணி என்று மக்கள் அழைப்பர்.
புகழ்பெற்ற நகர வதுக்கள் அல்லது நகர மணமக்கள்
தொகு- ஆம்ரபாலி - ஆடல் பெண்- கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்
- வசந்தசேனை- மிருச்சகடிகம் எனும் சமசுகிருத புதினத்தில் வரும் ஆடல் பெண்
- மாதவி - சிலப்பதிகாரம் காப்பியத்தில் வரும் ஆடல் பெண்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Spectrum lead article, The Sunday Tribune, 24 Dec 2000
- ↑ 2.0 2.1 "~viktor/wisdom/osho/marriage". phys.uni-sofia.bg. Archived from the original on 2018-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-02-09.
- ↑ Spectrum lead article, The Sunday Tribune, 24 Dec 2000