நகர உயர்நிலைப் பள்ளி, கும்பகோணம்

(நகர மேல்நிலைப்பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நகர உயர்நிலைப் பள்ளி, கும்பகோணம் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியாகும்.

வரலாறு

தொகு

14 ஏப்ரல் 1864இல் இப்பள்ளி ஆரம்பப் பள்ளியாக, பகவத் படித்துறை மண்டபத்தில், பணி நிறைவுபெற்ற ஆங்கிலேய தலைமைக்காவலரான மார்டின் என்பவரால் துவங்கப்பட்டது.[1] ரகுநாதசுவாமி ராவ், ராவ் பகதூர் டி. கோபால் ராவ் மற்றும் கோபு சுப்புராய செட்டியார் போன்றவர்கள் பள்ளி வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகித்தனர்.[2] கும்பகோணம் நகராட்சித் தலைவர் திரு. பி தம்புசாமி முதலியார் 1,00,800 சதுர அடி நிலத்திலிருந்த தன்னுடைய வாழைத் தோப்பை குறைந்த கட்டணத்தில் பள்ளிக்காக வழங்கினார்.[2] முதன்மைக்கட்டடத்திற்கான அடிக்கல் போர்ட்டரால் 29 டிசம்பர் 1881இல் நாட்டப்பட்டது.

1885 ஆம் ஆண்டில், பள்ளி இயங்கிய இரண்டு வீடுகள் ரூ.10,500க்கு விற்கப்பட்டன. 1887 ஆம் ஆண்டில், பி. தம்புசாமி முதலியார், ஏ.கே.நாராயண ஐயர் மற்றும் வி. கிருஷ்ண ஐயர் ஆகியோரைக் கொண்ட குழு, பள்ளி கட்டடத்தின் கட்டுமானத்தை மேற்பார்வையிட அமைக்கப்பட்டது. பாண்டிச்சேரியில் இருந்த ஒரு பள்ளியை மாதிரியாகக் கொண்டு 1891ஆம் ஆண்டில் ரூ.58,000 செலவில் இப்பள்ளி கட்டப்பட்டது. 1892 ஆம் ஆண்டு பள்ளி கல்வி இயக்குநராக இருந்த டாக்டர் டங்கன் அவர்களால் பள்ளிக்கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.

பள்ளியின் துவக்க காலம் முதல் இந்நிறுவனமானது கும்பகோணம் நகரத்தைச் சேர்ந்த குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாடு அரசின் உதவிபெறும் பள்ளியாக உள்ளது. இந்த பள்ளியின் குறிக்கோள் 'சத்தியம், மரியாதை, சேவை மற்றும் தியாகம்' என்பதாகும்.[1]

இப்பள்ளியின் தற்போதைய செயலர்/இணைப் பொறுப்பாளர் கே. பாலதண்டாயுதபாணி ஆவார். இப்பள்ளியின் வரலாற்றில் ஆர்.விஜயா முதல் தலைமைசிரியை ஆவார். இப்பள்ளியானது ஆங்கிலத்தில் மாணவர்களின் எழுதும் திறனை வளர்ப்பதற்காக இருமாதங்களுக்கு ஒரு முறை ஹார்மனி (Harmony) என்ற இதழை வெளியிடுகிறது. இங்கு ஆங்கில இலக்கிய சங்கம் உள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இப்பள்ளி 150ஆவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது.

வளர்ச்சி நிலை

தொகு

150 ஆண்டு கால வரலாற்றில் இப்பள்ளியானது பல நிலைகளைக் கடந்து வந்துள்ளது.[3]

  • 1905 தொடக்க வகுப்புக் கட்டடம் கட்டப்பட்டது.
  • 1915 அறிவியல் ஆய்வகம், டைப்ரைட்டிங் ஹால் கட்டப்பட்டது.
  • 1951 முதன்மைக்கட்டடம் முதல் தளம் கட்டப்பட்டது.
  • 1960 ஆபீஸ் செகரட்டரி கோர்ஸ் வகுப்பறை திறந்துவைக்கப்பட்டது.
  • 1964 செப்டம்பர் 21இல் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
  • 1977 தாசரதி கலையரங்கம் கட்டப்பட்டது. இதே ஆண்டில் சூலை 4இல் மேல்நிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியானது.
  • 1983 பாரதியார் நூற்றாண்டு கட்டடம் கட்டி, திறந்துவைக்கப்பட்டது.
  • 1989-90 இராமானுஜர் நூற்றாண்டு விழா கட்டடம் கட்டப்பட்டது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

தொகு
  • சீனிவாச இராமானுசன், கணிதவியலாளர்
  • இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி
  • பத்ம விபூசன் மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற, புகழ்பெற்ற மிருதங்கக்கலைஞர் உமையாள்புரம் கே. சிவராமன்
  • ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் நிறுவனர் மற்றும் தலைவரான ஷிவ் நாடார்
  • எஸ். கஸ்தூரி ரங்கா அய்யங்கார், தி இந்து நாளிதழின் முன்னோடி ஆசிரியர் மற்றும் உரிமையாளர்
  • பத்ம பூஷன் பெற்ற சிவில் பொறியாளர் எல். வெங்கடகிருஷ்ண ஐயர்
  • தொழிலதிபர் சின்னசாமி ராஜம் [4]
  • பறக்கும் மருத்துவர் என அழைக்கப்பட்ட எஸ்.ரங்காச்சாரி [4]
  • வரலாற்றறிஞர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் [4]
  • பத்ம பூஷன் பட்டம் பெற்ற பொறியியலாளர் எல்.வெங்கடகிருஷ்ண அய்யர் [4]

சீனிவாச ராமானுஜன்

தொகு

சீனிவாச ராமானுஜன், 1898ஆம் ஆண்டில் இப்பள்ளியில் மாணவராகப் பயின்றார். இங்கு அவர் ஜி எஸ் கார் எழுதிய தூய கணிதத்தில் எலிமெண்டரி,முடிவுகளின் சுருக்கம் என்ற நூலினைக் காணும்வாய்ப்பினைப் பெற்றார். அந்நூல் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக தனது சொந்த கணிதவியல் மற்றும் கணிதத் தொடரி கணிதத்தில் ஈடுபட்டதாக டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் வெளியிட்ட கையேடு கூறுகிறது.

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-10. பார்க்கப்பட்ட நாள் 2017-07-12.
  2. 2.0 2.1 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/150th-anniversary-celebrations-of-town-hss-from-january-27/article5255973.ece
  3. சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 33 - தா.நெடுஞ்செழியன், தினமணி, 12 பிப்ரவரி 2019
  4. 4.0 4.1 4.2 4.3 சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 34 - தா.நெடுஞ்செழியன், தினமணி, 19 பிப்ரவரி 2019

வெளியிணைப்புகள்

தொகு