நகுலபள்ளி தனலட்சுமி

நகுலபள்ளி தனலட்சுமி (Nagulapalli Dhanalakshmi)(பிறப்பு 6 திசம்பர் 1984)[1] ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.

இளமை தொகு

தனலட்சுமி 1984ஆம் ஆண்டு அன்றைய கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அட்டதீகல மண்டலத்தில் உள்ள கோண்டோலு கிராமத்தில் நாகுலபள்ளி ராகவா மற்றும் வீரப்பாய் டோரா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். 2011ஆம் ஆண்டு ராஜமறியில் உள்ள எஸ். கே. ஆர். கல்லூரியில் இளங்கலை கல்வியினை முடித்தார்.[1] பின்னர் கல்வியியல் இளநிலைப் பட்டம் பெற்றார். இவர் எர்ரம்பாளத்தில் உள்ள கிரிஜன் நலக் குடியிருப்புப் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். இவரது தாயார் நகுலபள்ளி ராகவா 2021இல் மூன்றாவது முறையாக கோண்டோலு பஞ்சாயத்தின் சர்பஞ்சாக தேர்ந்தெடுக்கப்பட்டார்[2]

அரசியல் தொகு

தனலட்சுமி 2019ல் முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக ஆனார். இவர் அரசியலில் நுழைவதற்காக சூன் 2018-இல் தனது ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். 2019 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் இராம்பச்சோதவரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட வந்தலா ராஜேஸ்வரியை 39,206 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2019 சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு[3][4] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "తూర్పు గోదావరి వైఎస్సార్‌సీపీ అభ్యర్థుల ప్రొఫైల్స్‌". Sakshi (in தெலுங்கு). 2019-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
  2. "కుమార్తె ఎమ్మెల్యే.. తల్లి సర్పంచ్‌." Sakshi (in தெலுங்கு). 2021-02-18. பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
  3. "YSRC proves a point with 10 women MLAs and 4 MPs". 2019-05-24. https://timesofindia.indiatimes.com/city/vijayawada/ysrc-proves-a-point-with-10-women-mlas-and-4-mps/articleshow/69471910.cms. 
  4. "ఆంధ్రప్రదేశ్ అసెంబ్లీ ఎన్నికల్లో గెలిచిన యువత వీళ్లే" (in te). https://www.bbc.com/telugu/india-48392475. 
  5. "Live Results: Rampachodavaram Assemlby Constituency (Andhra Pradesh)". பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகுலபள்ளி_தனலட்சுமி&oldid=3882362" இலிருந்து மீள்விக்கப்பட்டது