நக்கல்வாத மெய்யியலாளர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஓரளவு காலநிரல்படியமைந்த நக்கல்வாத மெய்யியலாளர்கள் பட்டியலாகும்.

கி.மு 4ஆம் நூற்றாண்டு
ஆண்டீசுதீனெசு அண். கி.மு 445-365 சாக்ரடீசின் மாணவர். நக்கலியல் மெய்யியலின் நெறிமுறைகளை உருவாக்கியவர்.
சினோப்பின் டையோஜீனெசு அண். கி.மு 412-323 நக்கலியல் மெய்யியலாளர். நக்கலியல் மெய்யியலின் தொல்வடிவ வகையாளர்.
ஒனெசிகிரிட்டசு அண். 360-அண். கி.மு 290 டையோஜீனெசின் மாணவர். மாமன்னர் அலெக்சாந்தருடன் பயணம் செய்தவர்.
அயேஜினாவின் பிலிசுகசு fl. கி.மு 325 ஒனெசிகிரிட்டசுவின் மகன், டையோஜீனெசின் மாணவர்.
சினோப்பின் ஃஎகசியாசு fl. கி.மு 325 டையோஜீனெசின் மாணவர்.
திராசில்லசு fl. கி.மு 325 நக்கலியல் மெய்யியலாளர்.
சிராக்யூசுவின் மோனிமசு fl. கி.மு 325 டையோஜீனெசின் மாணவர்.
தெபேசுவின் கிரேட்டசு அண். 365-அண். 285 நக்கலியல் மெய்யியலாளர். சிதியம் சீனோவின் ஆசிரியர்.
மரோனீயாவின் ஃஇப்பார்க்கசு fl. கி.மு 325 தெபேசுக் கிரேட்டசுவின் மனைவி.
மரோனீயாவின் மெட்ரோகிளெசு fl. கி.மு 325 இப்பார்க்கியாவின் உடன்பிறப்பு, தெபேசுக் கிரேட்டசுவின் மாணவர்.
தியோம்பிரோட்டசு fl. கி.மு 300 தெபேசுக் கிரேட்டசுவைப் பின்பற்றியவர்.
கிளியோமேனசு fl. கி.மு 300 நக்கலியல் மெய்யியலாளர், கிரேட்டசுவைப் பின்பற்றியவர்.
கி.மு 3ஆம் நூற்றாண்டு
போரிசுதீனெசுவின் பையோன் அண். கி.மு 325-அண். கி.மு 250 நக்கலியல் மெய்யியலாளர் and Sophist.
அலெக்சாந்திரியாவின் டெமெட்ரியசு fl. அண். கி.மு 275 நக்கலியல் மெய்யியலாளர் தியோம்பிரோட்டசுவின் மாணவர்.
எபேச்சுவின் எச்சிலசு fl. அண். கி.மு 275 நக்கலியல் மெய்யியலாளர் கிளியோமேனசு, தியோம்பிரோட்டசுவின் மாணவர் .
அலெக்சாந்திரியாவின் திமார்க்கசு fl. அண். கி.மு 275 கிளியோமேனசுவின் மாணவர்.
சொச்சாரசு fl. அண். கி.மு 275 தாரெண்டம் கவிஞர் லியோனிடாசால் குறிப்பிடப்படும் நக்கலியல் மெய்யியலாளர் .
மரோனீயாவின் சொடாடெசு fl. கி.மு 275 நக்கலியல் கருப்பொருள்களை எழுதிய கவிஞர்.
கதாராவின் மெனிப்பசு fl. கி.மு 275 நக்கலியல் மெய்யியலாளர், அறவியல் ஏளனவாதி.
மெனிடெமசு fl. கி.மு 250 நக்கலியல் மெய்யியலாளர்
Cercidas of Megalopolis அண். கி.மு 290-அண். கிமு 220 நக்கலியல் மெய்யியலாளர்-கவிஞர்.
மெகாராவின் டெலெசு fl. கி.மு 235 நக்கலியல் உரையாடல்களை எழுதிய ஆசிரியர்.
கி.மு முதல் நூற்றாண்டு
கதாராவின் மெலீகர் fl. கி.மு 90 நக்கலியல் மெய்யியலாளர், கவிஞர்.
கி.பி முதல் நூற்றாண்டு
கொரிந்துவின் டெமெட்ரியசு c. 1 -c. 75 AD நக்கலியல் ஆசிரியர், செனேக்கா, பயேடசு, திராசியா ஆகியோரின் நண்பர்.
இசிடோரசு fl. கி.பி 60 நக்கலியல் மெய்யியலாளர், நீரோவை பொதுவிடத்தில் அடித்து துவைத்தவர்.
கி.பி 2ஆம் நூற்றாண்டு
அகத்தோபுலசு fl. கி.பி 125 நக்கலியல் மெய்யியலாளர். டெமோனாக்சு, பெரெகிரினசு ஆகியோரின் ஆசிரியர்.
மவுனி செகுண்டசு fl. கி.பி 130 பேரரசர் ஏடிரியனைச் சந்தித்த நக்கலியல் மெய்யியலாளர்.
சிப்ரசுவின் டெமோனாக்சு fl. கி.பி 150 நக்கலியல் மெய்யியலாளர், உலூசியனின் ஆசிரியர்.
பெரெகிரினசு புரோட்டியசு கி.பி 100-165 நக்கலியல் மெய்யியலாளர், ஒலிம்பிக் விளையாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்.
பத்ராசுவின் தியாகெனெசு fl. கி.பி 150 பெரெகிரினசுவின் மாணவர், தன் ஆசிரியரின் தற்கொலையைப் பாராட்டியவர்.
கதாராவின் ஒயனோமயெசு fl. அண். கி.பி 150 சமய நம்பிக்கைகளைக் கண்டித்த நக்கலியலாளர்.
ஏதென்சின் பன்கிரேட்டசு fl. கி.பி 150 நக்கலியல் மெய்யியலாளர்.
கிறிசென்சு fl. கி.பி 160 நக்கலியல் மெய்யியலாளர். ஜசுட்டின் மார்ட்டிரின் திறனாய்வாளர்.
கி.பி 4ஆம் நூற்றாண்டு
எராகிளியசு fl. கி.பி 360 சொற்பொழிவில் பேரரசர் ஜூலியனைக் கண்டித்த நக்கலியல் மெய்யியலாளர்.
அசுகிளெபியாடெசு fl. கி.பி 360 ஆண்டியோக்கில் பேரரசர் ஜூலியனைச் சந்தித்த நக்கலியல் மெய்யியலாளர்.
இபிகிளெசு fl. கி.பி 360 நக்கலியல் மெய்யியலாளர்.
ஓரசு fl. கி.பி 375 நக்கலியலாளராக மாறிய ஒலிம்பிக் மற்போராளி.
கி.பி 5ஆம் நூற்றாண்டு
எமேசாவின் சால்லசுடினசு fl. அண். கி.பி 450 நக்கலியலாளராக மாறிய புதுப்பிளாட்டோனியர்.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு