நங்கூரத் தொடுப்பு
நங்கூரத் தொடுப்பு என்பது கயிறொன்றின் முனையொன்றை வளையம் அல்லது அதுபோன்ற பொருளொன்றுடன் கட்டுவதற்குப் பயன்படும் ஒரு முடிச்சு ஆகும். சில தற்காலப் பொருட்களினால் செய்யப்படும் கயிறுகளில் இடும்போது இம் முடிச்சு இறுகிவிடுவதற்கான வாய்ப்பு இருந்தாலும், நடுத்தர அளவான சுமைகள் ஏற்றப்படும் முடிச்சுக்களை இலகுவாக அவிழ்த்துவிட முடியும். பொருளைச் சுற்றி மேலதிகமாக இன்னொரு சுற்று இடுவதன் மூலம் முடிச்சு இறுகாமலிருக்கும் தன்மையை மேம்படுதலாம்.
நங்கூரத் தொடுப்பு | |
---|---|
பெயர்கள் | நங்கூரத் தொடுப்பு, மீனவர் தொடுப்பு |
வகை | கண்ணி |
அவிழ்ப்பு | இறுகும் |
பொதுப் பயன்பாடு | கயிற்றின் முனையொன்றை வளையம் போன்ற பொருட்களுடன் கட்டுதல் |
ABoK |
|
இழுவைக் கயிற்றுடன் நங்கூரத்தைக் கட்டுவதற்கு இந்த முடிச்சுப் பயன்படுகின்றது. இந்த முடிச்சு சுற்றுத் திருப்பமும் இரு அரைக் கண்ணியும் என்னும் முடிச்சை ஒத்தது. முதன் அரைக் கண்ணியை திருப்பத்துக்குக் கீழாக எடுப்பது மட்டுமே வேறுபாடு ஆகும்.
குறிப்புகள்
தொகு