நடனக் கோட்பாடு

நடனக் கோட்பாடு என்பது இசைக் கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர்புகொண்ட ஒரு கோட்பாடு. அண்மைக்காலத்தில் உருவான இத்துறை, நடனத்தின் இயல்புகளையும் அதன் பொறிமுறைகளையும் விளக்குகிறது. நடனக் கோட்பாடு நடனத்தின் தோற்றம், பாணிகள், வகை, கலை வெளிப்பாடு, போன்ற நடனம் தொடர்பான பல விடயங்களை உள்ளடக்குகிறது.


நடனக் கோட்பாடு உடலுறுப்பு அசைவுகள், சேர்ந்து ஆடுபவருடனான இடைவினைகள், அவர்களிடையேயான தொடர்புகள், இசையுடனான தொடர்புகள் போன்றவற்றைக் கையாள்கிறது. மனிதருடைய வெளிப்பாட்டு ஊடகம் என்றவகையிலும், தொடர்பாடல் ஊடகம் என்ற வகையிலும், நடனத்தின் தொடர்பிய, உடல் சார்ந்த, மனம் சார்ந்த, உணர்வு சார்ந்த, கலை சார்ந்த அம்சங்களை இது ஆய்வு செய்கிறது. இவ்வாறு ஆய்வு செய்யும்போது, பல்வேறு நடன வகைகளுக்கும், பாணிகளுக்கும் இடையிலான நுணுக்க வேறுபாடுகள் அவற்றின் சமூக, பண்பாட்டுப் பின்னணிகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. நடனம் பண்பாட்டில் எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றாக இருப்பதால், நடனக் கோட்பாடு நடனத்தின் உள்ளுணர்வு சார்ந்த இயல்புகளை அறிய முயல்வதுடன், சில அசைவுகள் இயல்பானவையாகவும் வேறு சில திணிக்கப்படுவன போன்றும் தோற்றுவதற்கான காரணங்களையும் கண்டறிய முயல்கிறது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடனக்_கோட்பாடு&oldid=649404" இலிருந்து மீள்விக்கப்பட்டது