நடான்சு

ஈரானிலுள்ள ஒரு நகரம்

நடான்சு (Natanz) (பாரசீக மொழி: نطنزஈரான் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்த இஸ்பகான் மாகாணத்தில் உள்ள நகரம் ஆகும். ஈரான் நாட்டின் தலைநகரான தெகுரானுக்கு நேர் தெற்கே 250 கிலோ மீட்டர் (150 மைல்) தொலைவில் நடான்ஸ் நகரம் உள்ளது. 2006-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்நகரத்தின் மொத்தக் குடும்பகள் 3,411 மற்றும் மக்கள் தொகை 14,122 ஆகும். இந்நகரத்தில் அணு குண்டு உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டம் உலை உள்ளது.

நடான்சு
نطنز
நகரம்
அப்துஸ் சமது இஸ்பரானி வழிபாட்டுத் தலம், 1604-இல் நிறுவப்பட்டது.
அப்துஸ் சமது இஸ்பரானி வழிபாட்டுத் தலம், 1604-இல் நிறுவப்பட்டது.
நடான்சு is located in ஈரான்
நடான்சு
நடான்சு
ஆள்கூறுகள்: 33°30′48″N 51°54′59″E / 33.51333°N 51.91639°E / 33.51333; 51.91639
நாடு ஈரான்
மாகாணம்இஸ்பகான்
கவுண்டிநடான்சு
பக்சுமத்திய மாவட்டம்
மக்கள்தொகை
 • மொத்தம்14,122[1]
நேர வலயம்ஒசநே+3:30 (ஈரானிய சீர் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (ஈரானின் பகல் வெளிச்சம்)

நடான்ஸ் அணு உலை

தொகு

நடான்ஸ் நகரத்திற்கு (33°43′N 51°43′E / 33.717°N 51.717°E / 33.717; 51.717) பாகையில் 33 கிலோ மீட்டர் தொலைவில், யுரேனியத்தை செறிவூட்டும் அணு உலை அமைந்துள்ளது. [2]2013-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி,பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அன்றாடம் நடான்ஸ் அணு உலையில் ஆய்வு மேற்கொள்கிறது. [3]

நடான்ஸ் அணு உலை விபத்து

தொகு

2 சூலை 2020 அன்று நடான்ஸ் அணு உலையின் யுரேனியம் செறிவூட்டூம் பகுதி எதிர்பாராத விதமாக தீ விபத்தில் வெடித்து சிதறியது.[4][5][6] இந்நிகழ்வுக்கு உள்ளூர் சிறுத்தைகள் குழு பொறுப்பு ஏற்றது.[7]சில ஈரானிய அதிகாரிகள் இந்த விபத்திற்கு காரணம் சைபர் தாக்குதலே ஆகும் எனக்கருதுகின்றனர்.[8]

பன்னாட்டு அணுசக்தி முகமையகம், 28 அக்டோபர் 2020 அன்று வெளியிட்ட செயற்கை கோள் படங்கள் மூலம், நடான்ஸ் நகரத்தில் சுரங்கம் தோண்டி, அதில் புதிய யுரேனியம் செறிவூட்டும் ஆலை அமைப்பதாக செய்தி வெளியிட்டது. [9]

மார்சு, 2021-இல் ஈரான் மீண்டும் நடான்ஸ் நகரத்தில் புதிய மூன்றாவது யுரேனியம் செறியூட்டும் உலையை இயக்கி வருகிறது.[10] 10 ஏப்ரல் 2021-இல் இதனை ஈரான் நாடு மறுத்துள்ளது.[11]11 ஏப்ரல் 2021 அன்று இசுலாமியக் குடியரசு செய்தி நிறுவனம், நடான்ஸ் அணு உலை விபத்து மின் கசிவினால் ஏற்பட்டது எனறும், இவ்விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை எனக்கூறியுள்ளது.[12]

இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

தொகு

நடான்ஸ் அணு உலை விபத்திற்கு இஸ்ரேல் நாடே காரணம் என 10 ஏப்ரல் 2021 அன்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. [13][14]

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Center of Iran". amar.org.
  2. "Implementation of the NPT Safeguards Agreement and relevant provisions of Security Council Resolutions 1737 (2006), 1747 (2007) and 1803 (2008) in the Islamic Republic of Iran, September 15, 2008" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2012-06-19.
  3. "Iran nuclear deal: Key points". BBC News. 24 November 2013. https://www.bbc.co.uk/news/world-middle-east-25080217. 
  4. Iran nuclear: Fire at Natanz plant 'caused by sabotage'
  5. "Analysts: Fire at Iran nuclear site hit centrifuge facility". Associated Press. 2 July 2020.
  6. "Mysterious Explosion and Fire Damage Iranian Nuclear Enrichment Facility". The New York Times. 2 July 2020.
  7. "Report: Israeli cyberattack caused Iran nuclear site fire, F35s hit missile base". The Times of Israel. 3 July 2020.
  8. "Iran threatens retaliation after what it calls possible cyber attack on nuclear site". Reuters. 3 July 2020.
  9. "Satellite photos show activity at Iran's Natanz nuclear facility". The Independent. பார்க்கப்பட்ட நாள் 28 October 2020.
  10. Murphy, Francois (2021-03-08). "Iran enriching with new set of advanced machines at Natanz: IAEA". Reuters. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
  11. 'Accident' at Iran's Natanz nuclear facility after centrifuge activation
  12. "Electrical Problem Strikes Iran's Natanz Nuclear Facility | Voice of America - English". www.voanews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
  13. அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து: இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத தாக்குதல் ஈரான் குற்றச்சாட்டு
  14. இரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தில் 'தாக்குதல்' - இஸ்ரேலுக்கு தொடர்பா?

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடான்சு&oldid=3131950" இலிருந்து மீள்விக்கப்பட்டது