நடிகை (திரைப்படம்)
திரைப்படம்
நடிகை 1951 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] சேச்சி என்ற மலையாளப் படத்தின் தமிழ்ப் பதிப்பான இத் திரைப்படத்தை டி. ஜானகிராம் இயக்கியிருந்தார். கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், மிஸ் குமாரி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நடிகை | |
---|---|
இயக்கம் | டி. ஜானகிராம் |
இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
நடிப்பு | கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் மிஸ் குமாரி அரன்முல பொன்னம்மா வைக்கம் ராஜு |
படத்தொகுப்பு | பி. ஜி. மோகன் |
வெளியீடு | 1951 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத் திரைப்படத்துக்கு ஜி. கே. வெங்கடேஷ் இசையமைத்திருந்தார். அவர் இசையமைத்த முதல் திரைப்படம் இதுவே.[2]
இத்திரைப்படத்தில் நடித்த வைக்கம் ராஜு, அந்நாளைய பிரபல பாடகி வைக்கம் சரஸ்வதியின் சகோதரராவார். இப்படத்தில் நடித்தபின் உடல் நலம் குன்றி காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2020-06-25. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
{{cite book}}
: Text "[" ignored (help) - ↑ "Chechi 1950". Archived from the original on 2020-07-15. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.