வைக்கம் சரஸ்வதி
வைக்கம் சரஸ்வதி (Vaikom Saraswathi) தென்னிந்திய கருநாடக இசைப் பாடகியும், திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார்.[2] இவர் பாடிய பல கருநாடக இசைப் பாடல்கள் இசைத்தட்டுகளில் வெளிவந்துள்ளன.[2] இந்திய வானொலிகளில் 1940கள், 50களில் இவரது கச்சேரிகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.[3]
வைக்கம் சரஸ்வதி | |
---|---|
பிறப்பு | வைக்கம், இந்தியா |
பணி | கருநாடக இசைப் பாடகி |
அறியப்படுவது | கருநாடக இசைப் பாடகி, பின்னணிப் பாடகி |
உறவினர்கள் | ராஜன் (சகோதரர், மலையாள பின்னணிப் பாடகர்)[1] |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுவைக்கம் சரசுவதியின் தந்தை காலட்சேபதிலகம் என அழைக்கப்பட்ட கவாய் விசுவநாத பாகவதர் ஆவார்.[4] கதாகாலட்சேபம் செய்து கொண்டே இசையுலகில் நுழைந்தவர் சரசுவதி. ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் மாணவி.[4]
தமிழில் பின்னணிப் பாடல் முறை வரத்தொடங்கிய 1947-ஆம் ஆண்டில், கே. வி. மகாதேவன் வைக்கம் சரஸ்வதியை தன அமராவதி திரைப்படத்திலே பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்தார்.[2] நடிகை பி. எஸ். சரோஜாவிற்காக கண்டேனடி, உன் திருவருள், அழகை ஆகிய பாடல்களை இத்திரைப்படத்தில் இவர் பாடினார்.[5] 1948 இல் வெளிவந்த ஜம்பம் திரைப்படத்தில் வாரும் இந்த வேளை, சேதி என்ன ஆகிய பாடல்களையும் இவர் பாடினார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yachakan (1951)". Archived from the original on 2019-09-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டெம்பர் 2019.
- ↑ 2.0 2.1 2.2 கலைமாமணி வாமனன் (29 ஏப்பிரல் 2018). "'திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018' – 9". தினமலர். Archived from the original on 5 செப்டெம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டெம்பர் 2019.
- ↑ "The Indian Listener" (PDF). Archived (PDF) from the original on 2019-09-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டெம்பர் 2019.
- ↑ 4.0 4.1 கானதாசன் (1948-10-31). "வித்வத் மண்டலம்". ஹனுமான்: 40.
- ↑ 5.0 5.1 "வைக்கம் சரஸ்வதி". பேசும் படம். சனவரி 1949.
வெளி இணைப்புகள்
தொகு- யூடியூபில் குழலூதும் கண்ணன் எங்கே - வைக்கம் சரசுவதியின் பாடல்