நடுவமைநாடி

(நடுவமைச்செல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நடுவமைநாடிகள் அல்லது நடுவமைச்செல்கள் அல்லது நியூட்ரோபில்கள் (Neutrophils) (இலங்கை வழக்கு:நடுநிலை நாடி) எனப்படுபவை குருதி உயிரணுக்களில் ஒரு வகையான வெண்குருதியணுக்களில் மிக அதிகளவில் காணப்படும் உயிரணுக்கள் ஆகும். வெண்குருதியணுக்களில் 60-70% மானவை, இவ்வகை உயிரணுக்களே ஆகும். இவற்றில் உட்கரு பல வடிவங்களில் அமைந்திருக்கும். எனவே இவற்றிற்குப் பல்லுரு உட்கரு நியூட்ரோபில்கள் (Polymorphonuclear Neutrophils) என்றும் பெயர் உண்டு.பொதுவாக இவற்றின் உட்கரு மூன்று தொடக்கம் ஐந்து சோணைகளைக் கொண்டதாக இருக்கும்.இவை நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் மிக முக்கிய பங்காற்றும். குறிப்பாக பக்டீரியா தொற்றுக்கு எதிரான நிர்பீடனத்தை (நோய் எதிர்ப்புத்திறனை) ஏற்படுத்தும் பிரதான கலங்கள் நடுவமை நாடிகள் ஆகும்.

A neutrophil, stained with Wright's stain.  This cell is approximately 12 µm in diameter.
A blood smear showing a neutrophil granulocyte; the three-lobulated nucleus can be seen. This picture has been stained with MayGrunwald Giemsa, and observed with a 100x objective in oil immersion.

வெளி இணைப்பு:

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுவமைநாடி&oldid=3217850" இலிருந்து மீள்விக்கப்பட்டது